சிங்கப்பூரில் எப்படியாவது, ஏதாவதொரு வேலைக்கு சென்றுவிட வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும் வரப்பிரசாதமாக இருப்பது skilled டெஸ்ட் மட்டும் தான். சம்பளம் குறைவு, வேலை அதிகம் என்று பல சிக்கல்கள் இருந்தாலும், எளிதில் வேலை கிடைக்க உதவுவது Skilled மட்டுமே. இதுகுறித்து நிறைய தகவல்களை நாம் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இது குறித்த படிப்பு முதல் இன்ஸ்ட்யூட்களில் கொடுக்கப்படும் பயிற்சிகள் என அனைத்தும் பார்த்து விட்டோம்.
இதில் மற்றுமொரு தகவல் குறித்து தான் தற்போது பார்க்க இருக்கிறோம். skilled test தேர்வின் போது நீங்க Fail ஆகிவிட்டால் என்ன செய்வது எனக் குழப்பத்தில் இருந்தால் இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Skilled test-ஐ பொறுத்தவரை உங்களுக்கு தரமான பயிற்சி கொடுத்து தான் மெயின் தேர்விற்கே அனுப்புவார்கள். அதனால் அதிகப்பட்சம் ஃபெயில் என்பது இருக்காது. இந்த தேர்வுகள் 4.5 மணி நேரம் இருக்கும். எழுத்து மற்றும் practical என இரண்டுமே இதில் இருக்கும்.
எழுத்து தேர்வில் 25 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். அதுவும் MCQ வடிவில் தான் இருக்கும். அதாவது, இருக்கும் கேள்விகளுக்கு பதிலை நீங்க டிக் செய்யும்படியானது தான் இது. ஒரு கேள்விக்கு 4 மார்க். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு இருக்கும். உங்கள் விருப்ப மொழியில் தான் கேள்விகள் இருக்கும். அதிகம் பேர் பெரிய படிப்பு முடிக்காமல் வருவதால் தமிழில் தான் கேள்விகள் அதிகமாக இருக்கும். அதுவும் அடிப்படை கேள்விகளாக தான் இருக்கும்.
அடுத்து, Practical தேர்வில் அதிகமாக ஃபெயில் ஆகுவதற்கு காரணம் பதட்டம் தான். அதை முதலில் தவிர்க்க பாருங்கள். பதட்டம் உங்களுக்கு நன்றாக தெரிந்த வேலையில் கூட தவறு நடக்க வாய்ப்பு உண்டு. practical தேர்வில் மேற்பார்வையாளர் கேமராவில் உங்களை தொடர்ந்து கவனிக்கலாம். அதனால் எப்போதுமே தைரியமாக பயிற்சியில் இருப்பது போலவே செய்யுங்கள்.
அதுப்போல, உங்களின் பாதுகாப்பும் அதிகமாக பார்க்கப்படும். அதனால் practical தேர்வின் போது அடிப்பட்டால் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும். கையில் காயம், ரத்தம் இருந்தால் அது உங்களுக்கு மதிப்பெண்ணினை குறைத்து விடலாம். கம்பி கட்டு வேலை, construction என அனைத்திலும் அதிக கவனமாக இருக்க வேண்டும். சின்ன தவறால் கூட ஃபெயில் செய்யப்படலாம்.
இதையும் மீறி, நீங்க தேர்வின் ஃபெயில் ஆகிவிட்டால் கண்டிப்பாக மறு தேர்வு நடத்தப்படும். இதற்கு அதிகபட்சமாக 14 நாட்கள் எடுக்கும். மீண்டும் எழுத்து மற்றும் practical தேர்வு நடத்தப்படும். அதில் கலந்து கொண்டு பாஸ் செய்தால் சான்றிதழ் கிடைக்கும். இதில் ஃபெயில் ஆகி இருந்தது எல்லாம் குறிப்பிடப்பட்டு இருக்காது. மொத்தமாக 3 முறை attempt எழுத முடியும். அதை தாண்டினால் உங்களால் மீண்டும் டெஸ்ட் எழுத முடியாது.