TamilSaaga

“வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை” : சிங்கப்பூரின் பிரபல சைனாடவுன் Food Street மூடப்பட்டது

சிங்கப்பூரின் ஸ்மித் தெருவில் உள்ள சைனாடவுன் Food Street சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மூடப்பட்டுள்ளது என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் கடந்த அக்டோபர் 26ம் தேதி அன்று செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. கடைசி நாளான கடந்த அக்டோபர் 22 வெள்ளிக்கிழமையன்று, முன்பிருந்த ஆரவாரம் இல்லாமல் நீண்டுகொண்டே இருந்த hacker ஸ்டால்களின் வியாபாரம் முற்றிலும் முடங்கியது.
அந்த இடத்தில் இரண்டு ஸ்டால்கள் மட்டுமே எஞ்சி நின்றதாக ST வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொற்றுநோய்க்கு முந்திய காலத்தில், அத்தெருவில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பிடித்த உணவை உண்ண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பயணிகள் கூட்டம் கூட்டமாக அலைமோதிக்கொண்டு இங்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் பெருந்தொற்று தாக்குதலுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு வகையான விளம்பரங்களும் உணவு வகைகளும், அந்த கூட்டத்தை திரும்பப் பெறவும், வருகையை அதிகரிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் கூட்டம் வராததால் இந்த புதிய வரவுகள் பயனளிக்கவில்லை.

கடந்த 2014ம் ஆண்டு முதல் அந்த இடத்தை தற்போது மூடும் வரை செலக்ட் குரூப் நடத்தி வந்தது. ஆனால் அங்கு கடைகள் நடத்திவந்த குத்தகைதாரர்கள் வாடகை செலுத்தவில்லை மற்றும் உணவுக் கடைகளுக்கு ஆதரவளிக்க உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை என்று அக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. செலக்ட் குரூப் பீச் கார்டன் சைனீஸ் மற்றும் டெக்சாஸ் சிக்கன் ஆகிய உணவகங்களை இங்கு நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சைனாடவுன் ஃபுட் ஸ்ட்ரீட் என்பது சைனாடவுனை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2001ல் திறக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

Related posts