TamilSaaga

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில் வேலை பார்க்குறீங்களா? நீங்கள் S-pass-க்கு மாறுவதற்கான “சக்ஸஸ் ஃபார்முலா”! பல ஊழியர்கள் S-Pass வாங்கியது இப்படித்தான்!

சிங்கப்பூரில் வேலைக்கு வர வேண்டுமெனில், பெரும்பாலானோருக்கு ஏற்ற தேர்வாக இருப்பது Work Permit தான். S-Pass, E-Pass போன்றவைக்கு விண்ணப்பித்தால் கிடைப்பது மிக மிக கடினம். குறிப்பாக, தற்போது S-Pass-க்கான கோட்டாவை சிங்கப்பூர் அரசு வெகுவாக குறைத்துவிட்டது. அதாவது, இந்தியாவில் இருந்து ஒருவர் புதிதாக S-Pass-க்கு விண்ணப்பித்து சிங்கப்பூர் வர வேண்டும் என்றால், அது அவ்வளவு சாதாரண ஒன்றாக இருந்துவிடாது.

அதேசமயம் Work Permit-ல் சிங்கப்பூர் வந்து, இங்கிருந்தபடியே S-Pass-க்கு மாறுவது என்பது ஓரளவுக்கு சாத்தியமான ஒன்று தான். ஏனெனில், உங்களுக்கு திறமையும், நல்ல அனுபவமும் இருக்கும் பட்சத்தில், சிங்கப்பூரில் இருந்து கொண்டே நீங்கள் எஸ் பாஸுக்கு முயற்சி செய்யலாம்.

சரி.. ஒர்க் பெர்மிட்டில் இருக்கும் ஊழியர்கள், எஸ் பாஸுக்கு மாற என்னென்ன செய்ய வேண்டும்? இதற்கு முன்பு ஒர்க் பெர்மிட்டில் இருந்தவர்கள், எஸ் பாஸுக்கு மாற என்னென்ன செய்தார்கள் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

முதலில், சிங்கப்பூரில் S Pass-ல் வேலை கிடைக்க வேண்டுமெனில், உங்களிடம் குறைந்தது ஒரு டிகிரி அல்லது டிப்ளமோ இருக்க வேண்டும். சிலர் குடும்ப சூழல் காரணமாக, பள்ளிப் படிப்பை மட்டும் முடித்து சிங்கப்பூர் வந்து ஒர்க் பெர்மிட்டில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் S-Pass-க்கு மாறவே முடியாதா என்றால், “நிச்சயம் முடியும்” என்று சொல்லலாம்.

ஆனால், அதற்கு நீங்கள் ஒரு விஷயத்தை செய்தாக வேண்டாம். அது சற்று கடினம் தான். இருந்தாலும் செய்தே ஆக வேண்டும். அப்படி என்ன விஷயம் அது?

வேறென்ன.. “படிப்பு” தான்.

ஆம்! நீங்கள் படிக்க தயாராக வேண்டும். ஏனெனில், உங்களிடம் இருப்பது பள்ளிக் கல்விக்கான சான்றிதழ் மட்டுமே. S-Pass-க்கு விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும் அல்லவா! ஸோ, கடினமாக இருந்தாலும் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டே படிக்க தயாராக வேண்டும். இங்கு நீங்கள் வேலை செய்வதால், உங்களால் முழு நேர கல்லூரிக்கு செல்ல முடியாது. எனவே, பார்ட் டைம் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும்.

பார்ட் டைம் கல்லூரிகளில், வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் தான் வகுப்புகள் நடைபெறும். மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வகுப்புகள் நடக்கும். அதேசமயம், அரசு கல்லூரிகளில் படிப்பதை விட, தனியார் கல்லூரிகளில் படிப்பதை தேர்வு செய்யுங்கள். ஏனெனில், அரசு கல்லூரிகளில் நீங்கள் படித்து முடிக்கவே 2 அல்லது 2.5 வருடங்கள் ஆகிவிடும். இதனால், நீங்கள் செய்ய வேண்டிய செலவும் அதிகம்.

அதுவே, தனியார் கல்லூரிகளில் ஒரே வருடத்தில் படிப்பு முடிந்துவிடும். செலவும் அரசு கல்லூரி கட்டணத்தை விட குறைவு தான். நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கல்லூரிகள் குறித்து விசாரித்து, அதில் சேருவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களே.. நிர்கதியாய் நிற்கும் நேரத்தில் கைக்கொடுக்கும் “தனிநபர் இன்ஷூரன்ஸ்”- மாதம் 10 வெள்ளி செலுத்தினால் போதும்

குறிப்பாக, உங்கள் வேலைக்கு ஏதுவான படிப்பை தேர்வு செய்யுங்கள். Technology, Management, Engineering, Business Studies, Economy ஆகிய துறைகளில் ஏகப்பட்ட டிப்ளமோ கோர்ஸ்கள் உள்ளன. இதில் ஒன்றை தேர்வு செய்து படித்து முடித்தால், S Pass-க்கு விண்ணப்பிக்கலாம்.

கல்லூரிகளும் அதிக கட்டணங்களும்:

நன்யாங் பாலிடெக்னிக் (NYP): பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ஆகிய படிப்புகளுக்கு NYP பெயர் பெற்றது. இங்கு வருடாந்திர கல்விக் கட்டணம் SGD 2,800 முதல் SGD 3,600 வரை இருக்கும்.

ரிபப்ளிக் பாலிடெக்னிக் (RP): பயன்பாட்டு அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு RP ஒரு பிரபலமான தேர்வாகும். கல்விக் கட்டணம் SGD 2,800 முதல் SGD 3,600 வரை இருக்கும்.

சிங்கப்பூர் பாலிடெக்னிக் (SP): பொறியியல், வணிகம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோர்ஸ்களை வழங்குகிறது. இங்கு வருடாந்திர கல்விக் கட்டணம் SGD 2,800 முதல் SGD 3,600 வரை இருக்கும்.

Temasek பாலிடெக்னிக் (TP): வணிகம், வடிவமைப்பு, பொறியியல் மற்றும் IT போன்ற படிப்புகளை இந்த கல்லூரி வழங்குகிறது. வருடாந்திர கல்விக் கட்டணம் SGD 2,800 முதல் SGD 3,600 வரை இருக்கும்.

என்ஜி ஆன் பாலிடெக்னிக் (NP): வணிகம், பொறியியல் மற்றும் வடிவமைப்பு ஆகிய படிப்புகளுக்கு இது பெயர் பெற்றது. வருடாந்திர கல்விக் கட்டணம் SGD 2,800 முதல் SGD 3,600 வரை இருக்கும்.

இங்கு, கட்டணம் இவ்வளவு அதிகமாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். எப்படியாவது கஷ்டப்பட்டு கோர்ஸை முடித்துவிட்டால், நீங்கள் S-PASS-க்கு நிச்சயம் விண்ணப்பிக்க முடியும். அப்படி விண்ணப்பித்து உங்கள் எஸ் பாஸ் கிடைத்துவிட்டால், அன்று நீங்கள் பட்ட கஷ்டத்தின் பலனை அனுபவிப்பீர்கள்.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts