TamilSaaga

சிங்கப்பூரில் Skilled டெஸ்ட்.. லட்சக்கணக்கில் பணம் கட்ட தேவையில்ல.. ஜஸ்ட் ரூ.80,000 மட்டுமே – நான்கே நாட்களில் “Certificate”

SINGAPORE: இன்றைய சூழலில், Skilled டெஸ்ட்டுக்கான கோட்டாவை சிங்கப்பூர் அரசு முற்றிலும் குறைத்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏஜென்சிகளும் இதனால் புலம்பிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மேல் பெரிதாக குறை சொல்ல முடியாது. அதிகம் பணம் வாங்கினாலும், அவர்கள் தரப்பில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டனர். ஆனால், தமிழகத்தில் டெஸ்ட் அடித்து செர்டிஃபிகேட் வாங்கிய பலரும், சிங்கப்பூருக்கு வேலைக்கு கிளம்பாமல் அப்படியே இருப்பது தான் பிரச்சனையே.

டெஸ்ட் அடித்தும் பலரும் சிங்கப்பூர் வராததால், பொறுத்து பொறுத்துப் பார்த்த சிங்கப்பூர் அரசு, தற்போது Skilled Test கோட்டாவை வெகுவாக குறைத்துவிட்டது.

நமது தமிழ் சாகா நிறுவனத்திடம் மிக சமீபத்தில் பேசிய பிரபல ஏஜென்சியின் நிறுவனர் ஒருவர், சிங்கப்பூர் பிஸ்னஸ் முற்றிலும் தற்போது குறைந்துவிட்டது என்று தெரிவித்தார். இந்த விஷயத்தில் சிங்கை அரசு கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும், ஊழியர்கள் பலரும் டெஸ்ட் அடித்தும் வேலைக்கு செல்லாமல் இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பது பற்றிய தகவல்களை உங்களுக்கு எடுத்துரைக்கிறது இந்த செய்தி. தற்போதைய சூழலில், தமிழகத்தில் உள்ள ஒரு நல்ல இன்ஸ்டிட்யூட்டில் நீங்கள் டெஸ்ட் அடிக்க வேண்டுமெனில், எப்படியும் 2 முதல் 2.5 லட்சம் செலவாகும். இவ்வளவு தொகை செலுத்தினால் தான் நீங்கள் மெயின் டெஸ்ட்டுக்கு ஏற முடியும்.

தமிழகத்தில் எப்படி டெஸ்ட் அடிக்கிறீர்களோ, அது போல் சிங்கப்பூரிலும் நீங்கள் டெஸ்ட் அடிக்க முடியும். ஆனால், எல்லா வேலைகளுக்கும் முடியாது. மிகச் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே சிங்கப்பூரில் நீங்கள் டெஸ்ட் அடிக்க முடியும்.

ஏஜெண்டுக்கு பணம் கொடுப்பதற்கு முன்.. ஒரேயொரு முறை இந்த இரண்டு “Focus Keywords” முயற்சி செய்து பாருங்க.. ஒரு ரூபா பணம் கொடுக்காமல் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தது இப்படித்தான்!

டெஸ்ட் அடித்தும் பலர் சிங்கப்பூர் வராமல் இருப்பதால், ஒருவேளை சிங்கப்பூரிலேயே இனி அனைத்து வேலைகளுக்கும் டெஸ்ட் அடிக்கலாம் என்று சிங்கை அரசு அறிவித்தால், அதற்கான கட்டணம் மற்றும் செயல்முறை எப்படி இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

நாம் முன்பே சொன்னது போல், தமிழகத்தில் 2 முதல் 2.5 லட்சம் செலவாகும் என்றால், சிங்கப்பூரில் வெறும் 1 லட்சத்திற்குள்.. அதாவது அதிகபட்சம் ரூ.80,000க்குள் தான் கட்டணம் வசூலிக்கபப்டும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

அதேபோல், தமிழகத்தில் டெஸ்ட் அடித்தால், முழு பிராசஸும் முடிய 45 முதல் 60 நாட்கள் வரை ஆகும். ஆனால், சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கும் பட்சத்தில் வெறும் 4 நாட்களில் அனைத்து பிராசஸும் முடிந்து Certificate கையில் வந்துவிடும் என்றும் கூறுகின்றனர். எனினும் சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வேண்டுமெனில், இங்கு வருவதற்கு என்ன விசா கொடுக்கப்படும்? அதன் பிராசஸ் எப்படி இருக்கும்? என்பதில் தெளிவான விளக்கம் இல்லை.

ஆனால், ஒன்று மட்டும் உறுதி.. தமிழகத்தில் டெஸ்ட் இல்லாமல், சிங்கப்பூரிலேயே எல்லா வேலைகளுக்கும் டெஸ்ட் அடிக்கும் வசதியை ஏற்படுத்தினால், ஒவ்வொரு ஊழியரின் கடன் தொகையில் அட்லீஸ்ட் 2 லட்சமாவது குறையும் என்பதில் சந்தேகமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts