TamilSaaga

ஊழியர்களுக்கு கைக்கொடுக்கும் “TWP Pass”.. விரைவில் பாஸ் அப்ரூவல்.. மற்ற பாஸுக்கான ஏஜென்ட் கட்டணத்தை விட குறைவு.. $2500 டாலர்கள் வரை சம்பளம்!

சிங்கப்பூர் Training Work Permit (TWP) என்பது வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் 6 மாதங்கள் வரை பயிற்சி பெற அனுமதிக்கும் ஒரு வகை பாஸ் ஆகும். TWP பாஸ் தொடர்பான முழு விவரங்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

TWP பாஸுக்கான தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் ஒரு சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து 6 மாதம் பயிற்சி எடுப்பதற்கான சரியான ஆர்டரை பெற்றிருக்க வேண்டும்.

நிறுவனத்தில் வழங்கப்படும் இந்த பயிற்சி விண்ணப்பதாரரின் கல்வித் தகுதிகள் அல்லது பணி அனுபவத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரரின் பின்னணியில் குற்றவியல் பதிவு அல்லது பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் எதுவும் இருக்கக்கூடாது.

TWP பாஸிற்கான விண்ணப்ப நடைமுறை:

சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் தான் பயிற்சி பெறுபவரின் சார்பாக TWP பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை மனிதவள அமைச்சகத்தின் (MOM) இணையதளம் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

பயிற்சி பெறுபவருக்கு பயிற்சித் திட்டத்தைப் பற்றிய தேவையான விவரங்களை நிறுவனம் முன்கூட்டியே வழங்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கான பிராசஸிங் கட்டணத்தையும் நிறுவனம் செலுத்த வேண்டும்.

சிங்கப்பூரில் மனிதவளத்துறை அமைச்சகம் (MOM) விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து கூடுதல் ஆவணங்கள் அல்லது தகவல்களை எந்நேரமும் கோரலாம். ஸோ, நீங்கள் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.

விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், மனிதவளத்துறை அமைச்சகம் உங்கள் TWP பாஸை நிறுவனத்துக்கு அனுப்பிவிடும். பிறகு நிறுவனம் சார்பில் உங்களுக்கு கொடுக்கப்படும்.

சம்பளம்:

TWP Pass-ல் சம்பளம் என்பது நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம், உங்களது தகுதி, இண்டஸ்ட்ரி பொறுத்து மாறுபடும்.

பொதுவாக, மனிதவள அமைச்சகம் (MOM) TWP வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பள அளவுகோலை நிர்ணயித்துள்ளது. செப்டம்பர் 2021 நிலவரப்படி, TWP வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம்,

டிப்ளமோ அல்லது அதற்கு சமமான தகுதி உள்ளவர்களுக்கு $1,400

டிகிரி அல்லது அதற்கு சமமான தகுதி உள்ளவர்களுக்கு $2,500

இருப்பினும், பயிற்சி பெறுபவர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நிறுவனம் சம்பளத்தை அதிகமாக கூட நிர்ணயிக்கலாம்.

TWP பாஸ்-ல் இருந்து வேறு பாஸுக்கு மாறுவது எப்படி?

உங்களது 6 மாத பயிற்சி காலத்தை முடித்த பிறகு, பயிற்சி பெறுபவர் எம்ப்ளாய்மென்ட் பாஸ் (EP) அல்லது எஸ் பாஸுக்கு விண்ணப்பிக்கலாம்.

எனினும், பயிற்சி பெற்றவர் அதற்குமுன் EP அல்லது S பாஸிற்கான தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு அதற்கான தகுதி இருந்தால் உங்கள் சார்பில் உங்கள் நிறுவனம் EP அல்லது S Pass க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சி பெறுபவர் தேவையான மருத்துவ பரிசோதனைகளையும் செய்து விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களைப் பெற வேண்டும்.

MOM உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து கூடுதல் ஆவணங்கள் அல்லது தகவல்களை எப்போது வேண்டுமானாலும் கோரலாம்.

விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், மனிதவளத்துறை அமைச்சகம் உங்களது EP அல்லது S Pass ஐ நிறுவனத்துக்கு அனுப்பிவிடும். பிறகு, நிறுவனம் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.

குறிப்பு: TWP பாஸை மற்ற பாஸ்களாக மாற்றுவது MOM-ன் ஒப்புதலுக்கு உட்பட்டது.

இதில் மற்றொரு முக்கியமான தகவல் என்னவெனில், அதுவே பயிற்சிக்கு சென்ற கம்பெனியில் “Service” மட்டும் இருக்கும் பட்சத்தில், Skilled test அடித்தாலும் நீங்கள் இந்தியா சென்றுவிட்டு தான் மீண்டும் சிங்கப்பூர் வர முடியும். ஏஜெண்டுகள் இந்த TWP பாஸுக்கு 1.20 லட்சம் வரை கட்டணமாக பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts