சிங்கப்பூரில் வேலைக்காக வந்திருக்கும் பலருக்கு பெரிய கனவே கடனை அடைத்து விட்டு சொந்த வீடு கட்டுவதாக தான் இருக்கும். ஆனால் அதற்குரிய தொகையை முழுதாக ரெடி செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது என்னவோ வங்கிகள் கொடுக்கும் வீட்டு கடன் தான்.
இது சொந்த நாட்டில் இருக்கும் ஊழியர்களுக்கு பெரிய வேலையாக இருக்காது. ஆனால் சிங்கப்பூரில் பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் எப்படி வீட்டுக்கடன் வாங்குவது என்ற யோசனையில் இருக்கிறீர்களா? உங்களுக்கும் ஒரு வழி இருக்கிறது. இங்குள்ள பல ஊழியர்கள் NRI வங்கி கணக்கு திறந்து பாரமரித்து வருவதே வீட்டு கடன் வாங்குவதற்காக தான்.
வீட்டுக்கடன் வாங்குவதற்காக தான் NRI கணக்கு ஓபன் செய்ய இருக்கிறீர்கள் என்றால் முதலில் உங்க சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் State Bank, IOB மற்றும் Indian வங்கிகளில் விசாரிக்க கூறுங்கள். வீட்டுக்கடன் போட இருக்கிறோம். வெளிநாட்டு ஊழியர்களுக்கு வீட்டுக்கடன் கொடுப்பீர்களா? அப்படி கொடுத்தால் என்னென்ன டாக்குமெண்ட்ஸ் கேட்பீர்கள்? வட்டி எவ்வளவு இருக்கும் என்பது குறித்து வங்கி மேனேஜரிடம் உங்கள் வீட்டாரை பேச சொல்லுங்கள். எந்த வங்கியில் வட்டி குறைவாக இருக்கோ அந்த வங்கியின் IFSC எண்ணை எழுதி வாங்கி வர சொல்லுங்கள்.
அதே வங்கி சிங்கப்பூரில் இருக்கும் அங்கு NRI கணக்கினை துவக்கும் போது இந்த IFSC கேட்கப்படும். அதுப்போல வங்கிக்கு செல்வதற்கு முன் அப்பாயிண்மெண்ட் வாங்கி கொள்ளுங்கள். சில வங்கிகளில் இது கட்டாயம் கிடையாது என்றாலும் முன் அனுமதி பெற்று செல்வது நல்லது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களும் NRI கணக்கு துவங்கலாம்… ஸ்டேட் பேங்க்கை விட IOBல் ரொம்ப ஈஸி… என்ன காரணம்?
ஸ்டேட் பேங்கில் NRI கணக்கு திறக்க ஒரிஜினல் பாஸ்போர்ட், வொர்க் பெர்மிட் தேவைப்படும். இந்த வங்கியில் மட்டும் கம்பெனியில் இருந்து கணக்கு திறந்து தரக்கோரி ஊழியர்கள் ஒரு லெட்டர் வாங்கி வங்கியில் கொடுக்க வேண்டும். ஆனால் IOB மற்றும் இந்தியன் வங்கிகளுக்கு இந்த லெட்டர் கேட்கப்படாது. அதுப்போல ஒரிஜினல் பாஸ்போர்ட்டும் இந்த வங்கிகளில் கேட்க மாட்டார்கள். ஜெராக்ஸ் இருந்தாலே போதுமானது.
எல்லா வங்கிகளும் முதலில் கணக்கினை திறக்கும் போது $100 முதல் $130 சிங்கப்பூர் டாலரை வாங்கி கொள்வார்கள். ஆனால் இது நேரடியாக உங்கள் கணாக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். இதில் சில வங்கிகள் $30 சிங்கப்பூர் டாலர்கள் சர்வீஸ் கட்டணமும் வாங்கி வருகிறார்கள்
இந்த தொகையை உங்களால் சொந்த நாட்டிற்கு திரும்பிய பிறகே எடுக்க முடியும். உங்கள் சம்பளத்தினை இந்த கணக்கில் வைத்து பராமரிப்பதே சிறந்தது. ஏனெனில் இந்த கணக்கில் இருக்கும் தொகைக்கு வரி பிடித்தம் எதுவும் இருக்காது. முதல் இரண்டு மாதங்களில் இந்த கணக்கினை திறந்து ஒரு வருடம் மொத்த சம்பளத்தினையும் இந்த கணக்கு வழியாக பராமரித்தால் கண்டிப்பாக உங்களுக்கு வீட்டுக்கடன் கிடைத்து விடும்.