சிங்கப்பூரில் 33 மற்றும் 47 வயதுடைய இருவர் சிராங்கூன் சென்ட்ரல் பகுதியில் சண்டையிட்டுக் கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மதர்ஷிப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) கூறியது : கடந்த டிசம்பர் 5, மதியம் 12:30 மணியளவில் பிளாக் 254 செராங்கூன் சென்ட்ரலில் இருவருக்கு இடையில் பலத்த சண்டை நடந்து வருவது குறித்து எச்சரிக்கப்பட்டதாக கூறினார்.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் மீண்டும் மனிதவள பற்றாக்குறை?
இணையத்தில் பரவிய இந்த சம்பவத்தின் ஆறு வினாடி கிளிப்பில், இரண்டு பேரும் சண்டையிடுவதையும் பலமாக தாக்கிக்கொள்வதையும் காட்டுகின்றது. முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில், பெரியவர் ஒருவர் எதிராளியை முகத்தில் குத்த முயற்சிக்கும்போது நிலை தடுமாறி கீழே விழுகிறார். இதனையடுத்து அந்த இளம் நபர் கீழே விழுந்த அந்த பெரிய நபரை பலமாக தாக்க தொடங்கியுள்ளார்.
அப்போது அருகில் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் தயவுசெய்து “சண்டையிடாதீர்கள்” என்று கூறியுள்ளார். அவர்கள் இருவரும் ஏன் சண்டையிட்டுக்கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது.
போலீசாரின் கூற்றுப்படி, இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட மறுத்துவிட்டனர். இந்த நிகழ்ச்சி குறித்து போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.