TamilSaaga

சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு மூவர் பலி : மேலும் 1178 பேருக்கு தொற்று : Dormitoryயில் 135 புதிய வழக்குகள் பதிவு

சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) நண்பகல் நிலவரப்படி 1,173 புதிய உள்ளூர் பெருந்தொற்று பரவல் பதிவாகியுள்ளன. இதில் 1,038 சமூக வழக்குகள் மற்றும் 135 தங்குமிட குடியிருப்பாளர்கள் அடங்குவர் என்று சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தற்போது பெருந்தொற்றுக்கு மேலும் மூன்று பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.

74 வயதான ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அவர் கடந்த ஆகஸ்ட் 31 அன்று டான் டாக் செங் மருத்துவமனையில் பெருந்தொற்றுக்கு சம்பந்தமில்லாத மருத்துவ நிலையில் அனுமதிக்கப்பட்டார் மற்றும் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டபோது எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லையென்பது உறுதியானது. ஆனால் அதன் பிறகு கடந்த செப்டம்பர் 9ம் தேதி எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு பெருந்தொற்று உறுதியானது.

ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அந்த நபருக்கு, நாள்பட்ட சிறுநீரக நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடேமியா வரலாறு இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர், 62 வயது பெண் மற்றும் 83 வயது ஆண் கடந்த திங்களன்று இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது புதியதாக பதிவாகியுள்ள வழக்குகளில் 60 வயதுக்கு மேற்பட்ட 311 முதியவர்களை உள்ளடக்கியது என்று MOH இரவு 11.45 மணிக்கு வெளியிடப்பட்ட தினசரி பதிப்பில் கூறியது. மேலும் நேற்று வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த தொற்று எண்ணிக்கை 1178 ஆக உள்ளது.

மருத்துவமனையில் 1,109 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் நலமாகவும் கண்காணிப்பிலும் உள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது. இதில், 147 தீவிர நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளிமெண்ட் தேவைப்படுகிறது. மேலும் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஆபத்தான நிலையில் உள்ளனர்.

Related posts