TamilSaaga

“சிங்கப்பூர் VTL திட்டத்தில் மாற்றம்” : மீண்டும் மனிதவள பற்றாக்குறை? – கட்டுமான நிறுவன திட்டங்கள் தாமதமாகும்

சிங்கப்பூரில் கட்டுமானம், கப்பல் கட்டும் தளம் மற்றும் செயல்முறைத் துறைகளில் உள்ள நிறுவனங்கள் நடப்பில் உள்ள தங்களது திட்டங்கள் மேலுக்கும் சில மாதங்கள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கின்றன. சிங்கப்பூரின் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகள் (VTLs) வழியாக சிங்கப்பூருக்குள் நுழைவதற்காக S பாஸ் அல்லது வேலை அனுமதி வைத்திருக்கும் தொழிலாளர்கள் புதிய விண்ணப்பங்களைச் செய்ய இந்தத் துறைகளில் உள்ள முதலாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதே இந்த தாமதத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : இனி VTL மூலம் சிங்கப்பூர் வரப் பதிவு செய்ய அனுமதி இல்லை – MOM

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 4) மனிதவள அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட சமீபத்திய தடைகள், மற்ற தங்குமிடங்களுக்குச் செல்லும் பணி அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களின் முதலாளிகளுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய வகை பெருந்தொற்று மாறுபாட்டான Omicron-ஐக் கண்டறிய சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் சிங்கப்பூர் கடுமையான நடவடிக்கைகளை விதித்துள்ளது.

கடந்த டிசம்பர் 5 நிலவரப்படி, வெளிநாடுகளில் இருந்து வந்த மூன்று வழக்குகள் Omicron-க்கு முதற்கட்டமாக நேர்மறை சோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிறுவனத்துடன் நேற்று திங்களன்று பேசிய சில நிறுவனங்கள், தற்போதுள்ள மற்றும் வரவிருக்கும் திட்டங்களுக்கான அட்டவணையைத் திட்டமிடுவது கடினமாக உள்ளது என்றும், ஏனெனில் அந்த திட்டங்கள் மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்றும் கூறியுள்ளார்.

ஹிட்டோமோ கன்ஸ்ட்ரக்ஷனின் தலைமை நிர்வாகி திருமதி. செரீன் பான் கூறுகையில், சிங்கப்பூருக்குள் சுமார் 10 தொழிலாளர்களை வரவழைக்க முயற்சித்து வந்ததாக கூறினார். “VTL மூலம் அதிகமான வெளிநாட்டுப் பணியாளர்கள் சிங்கப்பூருக்குள் விரைவாக நுழைய முடியும் என்பதால் அவர்களை வேலைக்கு அமர்த்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம், ஆனால் இந்தத் திட்டம் தற்போது சீர்குலைந்துவிட்டது” என்றார். சமீபத்திய தடைகளுடன், அதன் வரவிருக்கும் திட்டங்களில் 90 சதவீதம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts