சிங்கப்பூரில் கிருமி பரவாமல் காலத்தில் தனிமைப்படுத்துதல் உத்தரவு குறித்த சில குழப்பங்கள் எழுந்துள்ள நிலையில். அதற்காக தற்போது தனது மன்னிப்பினை கேட்டுள்ளது சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம். இந்த தொற்று காலத்தில் வெகு சிலருக்கு தவறுதலாக தனிமைப்படுத்தப்படும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அமைச்சக ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்தும் வசதிக்கு அழைத்துச் செல்வதற்காக தாங்கள் காத்திருந்ததாகவும். ஆனால் நீண்ட நேரம் கழித்தும் தங்களை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை என்றும் சிலர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தனது முகநூல் பதிவு வழியாக தனது மன்னிப்பினை கோரியுள்ளது.
“தனிமைப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் குறித்து நாங்கள் நிறைய கருத்துக்களைப் பெற்று வருகிறோம். தாமதங்கள் மற்றும் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களின் உண்மையான மன்னிப்புகள்” என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தொற்றின் அளவை குறைக்க அரசு முழுமையான முயற்சிகளை எடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.