TamilSaaga

“சிங்கப்பூரில் 6,62,520 வெள்ளி வரி ஏய்ப்பு” : ஒரு பெண் உள்பட 7 பேர் கைது – Sketch போட்டு தூக்கிய சிங்கப்பூர் Customs

சிங்கப்பூர் ஜூரோங் மற்றும் ஜூ சியாட் லேனில் 7,100க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று புதன்கிழமை (பிப்ரவரி 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 30 மற்றும் 52 வயதுடைய ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நிறுவனம் ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

Exclusive – சிங்கப்பூரில் வேலை பார்ப்பதற்கும், அரபு நாடுகளில் வேலை பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இந்தியர்களின் Top Choice எது?

கடந்த வெள்ளிக்கிழமை ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 62க்கு அருகில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட டிரக்கில் இருந்து பழுப்பு நிறப் பெட்டிகளை சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வேனுக்கு இரண்டு பேர் மாற்றுவதை சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் கவனித்தனர். சிறிது நேரத்தில் அந்த வேன் அந்த இடத்தை விட்டுச் சென்றது. அதேபோல சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு ஓபன் டாப் லாரி பின்னர் வந்து அந்த லாரிக்கு அருகில் நின்றது.

மீண்டும் அந்த ஆண்கள் பழுப்பு நிறப் பெட்டிகளை மாற்றுவதைப் பார்த்த அதிகாரிகள், அந்தப் பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருந்ததாக சந்தேகித்ததாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் சோதனை நடத்தியதில் இரு வாகனங்களிலும் 4,336 கார்டன்கள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த ஆண்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ஜூ சியாட் லேன் அருகே நடத்தப்பட்ட மேற்குறிப்பிட்ட நிகழ்வுடன் தொடர்புடைய நடவடிக்கையில், ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 62ல் இருந்து புறப்பட்ட வேனை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர்.

அப்போ வெறும் 5 நிறுவனம்.. இப்போ 71 நிறுவனம் : சிங்கப்பூரில் Angpowsக்கு மாற்றாகும் “QR Angpows” – DBS தரும் அசத்தல் தகவல்

அப்போது அந்த வேனை நோக்கி ஒரு நபர் நடந்து சென்றதையும், வேனிற்குள் ஆண் டிரைவரும் ஒரு பெண்ணும் உள்ளே இருந்த நிலையில் அவர்களை கைது செய்ய அதிகாரிகள் முற்பட்டனர். ஆனால் அவர்கள் தப்பிக்க முயற்சி செய்ய அதிகாரிகள் அவர்களை மடக்கிப்பிடித்தனர். வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கையாள்வதில் சந்தேகத்தின் பேரில் அந்த வேன் ஓட்டுநர் மற்றும் பெண் கைது செய்யப்பட்டனர். அந்த வேனில் மொத்தம் 2,850 அட்டைப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த அமலாக்க நடவடிக்கையில் மூன்று வாகனங்கள், 14,898.65 சிங்கப்பூர் டாலர்கள் மற்றும் 7,186 கார்டன்கள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

மொத்த வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை முறையே S$6,13,680 மற்றும் S$48,840 என்று சிங்கப்பூர் சுங்கத்துறை மேலும் கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts