TamilSaaga

பிரான்சில் மாஸ்க் அணியாமல் செல்ல அனுமதி – ஆனால் இது கட்டாயம்

பிரான்ஸ் சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சக அனுமதி இடங்களில் முக்ககவசம் அணிவது கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரான்சில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, உணவகங்கள், பானம் அருந்துமிடங்கள், திரையரங்குகள் மற்றும் பொழுது போக்கு இடங்கள் போன்றவற்றிற்கு செல்ல இன்று முதல் pass sanitaire என்கிற சுகாதார அனுமதி சீட்டும் கட்டாய நடைமுறை ஆகியுள்ளது.

இந்த பாஸ் வைத்து உள்ளவர்கள் இந்த இடங்களுக்கு செல்லும்போது அவர்கள் அங்கு முக்கக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதார பாஸ் வைத்திருப்பவர்களில் TGV தொடருந்துகளில் , அல்லது விமானங்களில் பயணிப்பவர்கள் தொடர்ந்தும் கட்டாயம் முக்கக்கவசம் அணியவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts