சிங்கப்பூரின் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக துவங்கி இருக்கும் நிலையில், போட்டியில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் களம் காண இருக்கிறார். சமீபத்தில் அவர் தனது முதல் பிரச்சாரத்தையம் தொடங்கியுள்ளார்.
66 வயதாகும் தர்மன் சண்முகரத்தினம் தமிழகத்தினை பூர்வீகமாக கொண்ட அமைச்சர். 22 ஆண்டுகளாக சிங்கப்பூர் மக்களுக்கு அறிமுகமான பிரபல முகமான இவர், அரசியலில் மிகவும் பாப்புலராக இருந்து வருகிறார். தீவிர அரசியலில் இருந்து கடந்த மாதம் விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து சிங்கப்பூரின் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூர் கலாச்சாரம், அங்குள்ள சில விதிமுறைகள் மற்றும் ஒருவருக்கொருவர் பணிபுரியும் விதம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என கூறிய தர்மன், அதற்காக இந்த பந்தயத்தில் அடியெடுத்து வைத்தாக கூறினார்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள்.. ஏஜெண்ட் உண்மையில் உங்கள் வேலைக்கு விண்ணப்பித்துள்ளாரா? Passport நம்பர் மட்டுமே வைத்து கண்டறிவது எப்படி?
2019 முதல் 2023 வரையிலான காலத்தில் சிங்கப்பூரின் மூத்த அமைச்சராக இருந்தார். அதுமட்டும் அல்லாது 2015 முதல் 2023 வரையிலான காலத்தில் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார்.
பிரச்சாரத்தினை துவங்குவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகரத்தினம், புதிய சகாப்தத்திற்கான அதிபராக இருக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும், சிங்கப்பூரில் எந்த வித பிரிக்கவே முடியாத சமூகமாக உருவாக்க வேண்டும். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த புதிய மற்றும் மிகவும் சவாலான மாற்றத்தினை செய்ய தனது முழு அனுபவத்தையும் திறன்களையும் கொண்டு வருவேன் என்றும் தர்மன் உறுதியளித்தார்.
தர்மன் சண்முகரத்தினம், இலங்கையில் இருந்து சிங்கப்பூர் குடிபெயர்ந்த தமிழர். பல தலைமுறைகளாக இவரது குடும்பம் சிங்கப்பூரில் வசித்து வருகிறது. தர்மனின் தந்தையான சண்முகரத்தினம், சிங்கப்பூர் நோயியலின் தந்தை என அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானியான எமரிடஸ் பேராசிரியர் கே சண்முகரத்தினத்தின் மூன்று மகன்களில் ஒருவர் ஆவார்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் ஏன் இத்தனை வொர்க் பாஸ்… என்னென்ன வித்தியாசம்… அட இதில் இத்தனை இருக்கா? தெரிஞ்சிக்கலாமே!
புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு சண்முகரத்தினம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் Singapore Cancer Registry-யையும் நிறுவியவரும் சண்முகரத்தினம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் அதிபராக இருக்கும் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.