TamilSaaga

10 ஆண்டுகால பயணம்.. “நீங்கள் இல்லாமல் இது எதுவுமே சாத்தியமில்லை” – நமது சிங்கப்பூர் பிரதமர் மகிழ்ச்சியோடு வெளியிட்ட வீடியோ

சிங்கப்பூரின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கினை வகிக்கும் நமது முன்னாள் பிரதமர் லீ குவான் அவர்களின் மூத்த மகன் தான் நமது சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் லீ சீயன் லூங். மக்கள் செயல் கட்சியின் செயலாளராக இருந்துவரும் நமது லீ, நம் நாட்டின் அடுத்த பிரதமராக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் அவர்கள் பதவியேற்பார் என்று கூறினார்.

அடுத்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்பட்சத்தில் வோங் அவர்கள் புதிய பிரதமராக பதவி ஏற்பர் என்பது குறிப்பிடத்தக்கது. நமது தற்போதைய பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) 10 பிப்ரவரி 1952ம் ஆண்டு பிறந்தார், லண்டனில் கணிதம் மற்றும் கணிப்பொறிக் கல்வியும், அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் Public Administration பயின்றார்.

கையும் காலும் செயலிழந்து போச்சு.. பேசக்கூட முடியல.. பிரபல தமிழ் நடிகை ப்ரீத்தா ராகவ் கண்ணீர் மல்க வீடியோ – உதவிக்கு கைக்கோர்க்கும் திரையுலகினர்!

தந்தையை போலவே திறன்பட செயலாற்றி வரும் லீ அவர்களுக்கு தற்போது வயது 70, 1984ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1987ம் ஆண்டு முதல் அமைச்சராகவும் செயலாற்றி வந்த லீ அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தனது 52 வயதில் சிங்கையின் பிரதமராக பதவியேற்றார்.

அன்று தொடங்கி இன்றுவரை சிங்கப்பூர் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் நமது பிரதமர் லீ இன்று April 20ம் தேதி தான் Social Mediaவிற்கு வருகை தந்து 10 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டெர் பதிவில் “இன்றுடன் சமூக வலைதளங்களில் எனது 10வது ஆண்டை நிறைவு செய்கின்றேன். இது ஒரு வேடிக்கையான மற்றும் ஆச்சரியமான அனுபவமாக இருந்தது. நீங்கள் இல்லாமல் எனது சமூக ஊடகப் பயணம் சாத்தியமில்லாததே, உங்கள் ஆதரவுக்கு நன்றி!” என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் அவரை சுமார் 0.8 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர், அதே போல முகநூலில் 1.7 மில்லியன் பேர் அவரை பின்தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நாளை குறிக்கும் வகையில் “தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts