TamilSaaga

“சிங்கப்பூரின் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 12.3% உயர்ந்தது” : இதற்கு காரணம் “இந்த” மூன்று நாடுகள் தான்

சிங்கப்பூரின் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி (NODX) கடந்த செப்டம்பர் மாதத்தில் 12.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து 10வது மாதமகா ஏற்படும் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (ESG) இன்று திங்களன்று (அக்டோபர் 18) வெளியிட்ட தரவுகளின்படி, சிங்கப்பூரில் மின்னணு ஏற்றுமதியும் அதிகரித்திருந்தாலும், இந்த வளர்ச்சி என்பது முக்கியமாக எலக்ட்ரானிக்ஸ் அல்லாதது பொருட்களை சார்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. முந்தய மாதங்களில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு NODX செப்டம்பரில் 1.2 சதவிகிதம் அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மின்னணு ஏற்றுமதியும் செப்டம்பர் மாதத்தில் 14.4 சதவிகிதம் விரிவடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு காரணமாக integrated circuits, தனிப்பட்ட கணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் ஆகியவை உள்ளன. பெட்ரோ கெமிக்கல்ஸ், சிறப்பு இயந்திரங்கள் மற்றும் மருந்துகள் தலைமையிலான ஒரு வருடத்திற்கு முந்தைய செப்டம்பரில் மின்னணு அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

EU 27, மலேசியா மற்றும் தாய்லாந்துக்கான ஏற்றுமதி குறைந்துவிட்டாலும், செப்டம்பர் மாதத்தில் மொத்த சந்தைகளுக்கும் ஏற்றுமதி உயர்ந்தது என்று ESG தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பாளர்கள் சீனா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பணமில்லாத தங்கம், பெட்ரோ கெமிக்கல்கள் மற்றும் Integrated Circuits காரணமாக சீனாவுக்கான ஏற்றுமதி 38.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

மருந்துகள், சிறப்பு இயந்திரங்கள் மற்றும் இதர உற்பத்தி பொருட்கள் காரணமாக செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 22.2 சதவிகிதம் அதிகரித்தது. மேலும் சிறப்பு இயந்திரங்கள், Integrated Circuits மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் காரணமாக தென் கொரியாவுக்கான ஏற்றுமதி 61.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts