TamilSaaga

குடும்ப பிரச்சனை.. சிங்கப்பூரில் கடன் வாங்கிய வெளிநாட்டு ஊழியர்.. வீட்டுக்கு “Delivery Boys” அனுப்பி “Torture” கொடுத்த நபர் – இறுதியில் கைக்கொடுத்த சிங்கை முதலாளி

சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த விதத்தில் பிரச்சனைகள் வந்தாலும் அதை மனிதவள அமைச்சகமும், அல்லது குறிப்பிட்ட அந்த பணியாளரின் முதலாளிகளும் நிச்சயம் உதவிக்கு வருவார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு விஷயம் சிங்கப்பூரில் நடந்துள்ளது.

சுமார் ஓராண்டுக்கு முன்பு கடந்த ஏப்ரல் 1, 2021 அன்று Braddell Heights பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு 20 உணவு டெலிவரி ரைடர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக வந்துள்ளனர். ஆனால் அந்த குடும்பத்தினர் யாருமே எந்தவித உணவு ஆர்டரைகளையும் செய்யாததால் அந்த குடும்பத்தாரும், டெலிவரி செய்ய வந்தவர்களும் குழம்பிப்போயினர்.

இந்த சம்பவம் குறித்த நான்கு வினாடி கிளிப் ஒன்று தற்போது முகநூலில் வெளியாகியுள்ளது. வீடு ஒன்றின் வெளியே சாலையோரம் டெலிவரி ரைடர்கள் கூடுவதை அதில் பார்க்கமுடிகிறது. மதியம் சுமார் 1.30 மணிமுதல் 3.30 மணிவரை தொடர்ச்சியாக Food டெலிவரி டிரைவர்கல் அங்கு வந்த வண்ணம் இருந்தனர். இறுதியில் தான் அந்த டெலிவரி டிரைவர்களுக்கு இது வெறும் Fake Order என்று தெரியவந்தது.

“இதெல்லாம் சகஜம்டா தம்பி வா”.. 6 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமையை அனுபவித்த சிங்கப்பூரர் – “என்னுடைய தவறும் கொஞ்சம் இருக்கு”

இதை தொடர்ந்து Daily News செய்தி நிறுவனம் அந்த வீட்டில் உள்ளவர்களை அணுகி நடந்ததை கேட்டபோது, அந்த வீட்டில் ஒரு பெண்மணி, அவரது கணவர், மாமியார், குழந்தை மற்றும் ஒரு வெளிநாட்டு வீடு பணியாளர் ஆகியோர் இருந்ததும் அவர்கள் யாரும் எந்தவித உணவும் ஆர்டர் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. தங்களுக்கு ஏன் இந்த விஷயம் நடந்தது, யார் இதை செய்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.

இந்நிலையில் தான் இந்த விஷயத்தில் ஒளிந்திருந்த ஒரு மாபெரும் குற்றம் வெளியானது, அந்த வீட்டில் Delivery ஓட்டுநர்கள் குவியக் காரணம், யாரோ ஒருவர் அந்த வீட்டில் உள்ள ஒருவரின் கவனத்தை ஈர்க்க செய்தது என்று தெரியவந்தது. அந்த வீட்டு உரிமையாளர் ஊடகங்களுக்கு அளித்த தகவலின்படி சம்பவத்தன்று மாலை ஒரு “கடன் கொடுக்கும் ஆசாமி” தன்னை தொடர்புகொண்டு தனது வீட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர் அவரிடம் கடன் வாங்கியுள்ளார் என்று கூறியுள்ளார். அதனால் தான் உங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இவ்வாறு செய்தேன் என்றும் கூறியுள்ளான்.

தனது வீட்டில் சுமார் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அந்த பணியாளரிடம் கடன் வாங்கியது உண்மையா என்று கேட்டபோது அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரால் தான் அந்த டெலிவரி ஆட்கள் அங்கு குவிந்தனர் என்று அறிந்து அந்த பணியாளர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள்.. ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகும்? – குறைந்த சம்பளமா இருந்தாலும் மாதம் 30,000 வீட்டுக்கு அனுப்புவது எப்படி?

இந்தோனேசியாவில் ஏழ்மையில் வாடும் தனது குடும்பத்தின் செலவுக்காக அவர் அந்த பணத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பயந்த மனநிலையில் இருந்த அந்த தொழிலாளரை பாதுகாக்கும் விதத்தில் “சிங்கப்பூரை நம்பி வந்துள்ள எனது வீட்டு பணியாளர், என்னிடம் கூட ஒருமுறை கடன் பெற்று அதை மீண்டும் சரியாக அடைந்துள்ளார். ஆகையால் நிச்சயம் அவர் பெற்ற அந்த கடனையும் நிச்சயம் அடைத்துவிடுவார்” என்று தனது தொழிலாளியின் பக்கம் நின்று அந்த முதலாளி பேசியது பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

லோன் கட்ட கால அவகாசம் இருக்கும்போது தேவையற்ற முறையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சிங்கப்பூர் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வழக்கிலும் அந்த லோன் கொடுத்த நபர்கள் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts