சிங்கப்பூரில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் ஃபைசர்-பயோண்டெக் (Pfizer-BioNTech) தடுப்பூசியானது ஐரோப்பாவின் பல்வேறு தளங்களில் தயாரிக்கப்பட்டு சந்தை ஒழுங்குமுறை நடைமுறைகளை பின்பற்றி பெயரிடப்பட்ட தடுப்பூசியாகும்.
தேசிய தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த “கோமிர்னாட்டி” (Comirnaty TM) தடுப்பூசியின் ஒரு தொகுப்பு பெறப்பட இருக்கிறது.
இந்த கோமிர்னாட்டி தடுப்பூசியானது நாம் ஏற்கனவே பயன்படுத்தக்கூடிய ஃபைசர்-பயோண்டெக் போன்றே தயாரிக்கப்படுகிறது. ஒரே தயாரிப்பு முறைகளையும் ஒரே ஆராய்ச்சி பெயர் BNT162b2 என்பதையும் கொண்டுள்ளது.
ஒரே செயல்முறை நடைமுறைகளை பின்பற்றி தயாரிக்கப்படுவதாலும், ஒரே மாதிரியான தயாரிப்பு குறிப்பு விவரங்களை பதிவு செய்வதாலும் இரண்டிற்கும் வேறுபாடு ஏதுமில்லை. இரண்டுமே ஐரோப்பாவில் இருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதில் காணப்படும் ஒரே வித்தியாசம் ‘லேபில்’ மட்டுமே என்றும் நிர்வாக ரீதியான பயன்பாடு மற்றும் பிரதிபலிப்பிற்காக ஃபைசர்-பயோண்டெக்/கோமிர்னாட்டி என்ற வகைப்பாட்டில் பெறப்படுகிறது. இதனை பெறும் மக்களின் உடல்நல (HealthHub) விவரப் பதிவுகளை சுகாதார அமைச்சகம் சரிசெய்யும் என்று MOH தனது இணைய பதிவில் அறிவித்துள்ளது.