TamilSaaga

சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட BMW கார்.. “நடுரோட்டில் இடுப்பை ஆட்டி ஆட்டி மூச்சா போன இளைஞர்” – பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஆத்திரத்தை அடக்கலாம், ஆனால் இயற்கையின் அழைப்பை அடக்கமுடியுமா? சிங்கப்பூரில் Roads.sg என்ற முகநூல் பதிவில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட BMW காரில் இருந்து வெளியேறி சாலையோரத்தில் சிறுநீர் கழித்த ஒருவரின் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. நேற்று ஏப்ரல் 5ம் தேதி அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய Driving License வைத்து Singapore License எடுப்பது எப்படி? யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே Convert செய்யலாம் – Complete Report

சம்பவத்தின்போது அந்த நீல நிற BMW காரில் இருந்து இருவர் வெளியே இறங்கிய நிலையில், ஓட்டுநர் இருக்கையில் இருந்தவர் நடுரோட்டில் சிறுநீர் கழிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபரிடம், காரில் இருந்து இறங்கிய மற்றொருவர் அருகில் CCTV கேமரா இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அவர் கூறியதை அந்த நபர் பெரிய அளவில் பொருட்படுத்தியாக தெரியவில்லை என்று தான் கூறவேண்டும்.

தனது கால் சட்டையின் ஜிப்பை கழட்டி அங்கு இருக்கும் ட்ரைனேஜ் போன்ற அமைப்பில் சிறுநீர் கழிக்க துவங்குகிறார். அதுவும் இடுப்பை அங்கும் இங்கும் ஆட்டி மிகுந்த ஒய்யாரமாக அவர் சுறுநீர் கழிப்பதை அந்த காணொளியில் காண முடிந்தது. என்னதான் ரொம்பவும் நகைச்சுவையான வகையில் அவர் அந்த காரியத்தை செய்திருந்தாலும், தவறு தவறுதானே.

சிங்கப்பூரில் வரலாறு காணாத அளவில் உயரும் வேலைவாய்ப்பு.. இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவருக்கு எந்தெந்த துறையில் வாய்ப்பு? – “Job Vacancies List வெளியிட்ட MOM”

இணையத்தில் இதை பார்த்த பலர், மிருகங்கள் தானே தங்கள் எல்லைகளை குறிக்க இவ்வரும் சிறுநீர் கழிக்கும், இவர் எந்த வகை மிருகம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிங்கப்பூரில் பதிவு செய்த வாகனம் என்றபோது இந்த விஷயம் நடந்தது மலேசியாவின் johor bahru பகுதியில் என்பதால் பலர் இவர் சிங்கப்பூரின் நற்பெயரை மலேசியா வரை வந்து கெடுக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts