TamilSaaga

“இது மேடு பள்ளங்கள் நிறைந்த போராட்டம்” : தேசிய தின உரையில் அமைச்சர் ஈஸ்வரன் – காணொளி உள்ளே

“என் சக சிங்கப்பூரர்களே வணக்கம்! நான் பூமலையில் உள்ள சிம்பனி ஏரியில் இருக்கின்றேன், இது சிங்கப்பூரர்கள் பலருக்கும் பிடித்த இடம். முன்னர் இருந்த பரபரப்பு இப்போது இல்லை, ஆனால் இது இன்னும் பிரபலமாகவே உள்ளது. பெருந்தொற்றுக்கு எதிரான நமது போராட்டம் மேடு பள்ளங்கள் நிறைந்த ஒன்று. இந்த கிருமி ஒரு பயங்கரமான எதிரி. அதனால் உலகளவில் மில்லியன் கணக்கானோர் மாண்டனர், அதிகமானோர் நோய்வாய்ப்பட்டனர். எண்ணற்ற வேலைகள் தொழில்கள் பாதிக்கப்பட்டன.”

“சிங்கப்பூரில் அதனை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக நாம் எண்ணும் ஒவ்வொரு முறையும், எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கின்றன. மிக அண்மையில் ஜூரோங் மீன்வளத்துறை முகத்தில் தொற்று பெரிய அளவில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து பல ஈரச்சந்தைகளுக்கு பரவியது. அதனை மெதுவாடையச்செய்ய நாம் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்தோம்”.

“எவ்வளவு கவனமாக இருந்தும் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதுபோல் ஆனதில் பல சிங்கப்பூரர்களுக்கு ஏமாற்றம். அதை புரிந்து கொள்ள முடிகிறது எப்போதுமே நமது இலக்கு உங்களையும் உங்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதுதான். பொது சுகாதார நடவடிக்கைகள், சமுதாய கட்டொழுங்கு, நிதிஆதரவு ஆகிய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம்”

என்று தனது உரையை பேசினார் அமைச்சர் எஸ். ஈஸ்வரன். அவர் பேசிய காணொளி பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உரை

Related posts