TamilSaaga

சிங்கப்பூரில் இந்த 3 நிறுவனங்களில் வேலை கிடைத்தால்… உங்கள் வாழ்க்கையே மாறிவிடும் – உத்வேகம் தரும் LinkedIn அறிவிப்பு

SINGAPORE: தொழில்சார் நெட்வொர்க்கிங் தளமான LinkedIn புதன்கிழமை (ஏப்ரல் 6), சிங்கப்பூரின் சிறந்த நிறுவனங்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

நுகர்வுப் பொருட்களின் நிறுவனமான யூனிலீவர் (Unilever), ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி (Standard Chartered Bank) மற்றும் காப்பீட்டு நிறுவனமான Prudential ஆகியவை சிங்கப்பூரில் உள்ள 15 சிறந்த நிறுவனங்களில், முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

OCBC வங்கி இம்முறை நான்காவது இடத்திற்கு சரிந்தது. அதே நேரத்தில் DBS வங்கி 2021 இல் 15 வது இடத்திலிருந்து இந்த ஆண்டு ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.

ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் 7 முக்கிய காரணிகளின் அடிப்படையில் LinkedIn இந்த நிறுவனங்களின் வரிசையை பட்டியலிட்டுள்ளது.

முன்னேறும் திறன்,

நிறுவனத்தின் தொடர்பு,

நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை,

வெளிப்புற வாய்ப்பு,

பாலின வேறுபாடு,

திறன் வளர்ச்சி மற்றும்

spread of educational backgrounds

ஆகிய 7 காரணிகள் இந்த பட்டியலில் எடுத்துக் கொள்ளப்பட்டன. பட்டியலில் மொத்தம் உள்ள 15 முன்னணி நிறுவனங்களில் ஆறு நிதி நிறுவனங்கள் தான்.

இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட StanChart, இந்த ஆண்டுக்குள் 8,000 ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், மேம்படுத்தவும் ஒரு உலகளாவிய கற்றல் மையத்தில் $5 மில்லியன் முதலீடு செய்துள்ளது.

OCBC தனது பணியாளர்கள் மற்றும் புதிய பயிற்சியாளர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்று LinkedIn மேலும் கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 க்கும் மேற்பட்ட நிலைத்தன்மை தொடர்பான வேலைகளை உருவாக்கியுள்ளது, மேலும் 30,000 ஊழியர்களுக்கு சுமார் 1,900 நிலைத்தன்மை பயிற்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் முதன் முறையாக ஆறு நிறுவனங்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்,

ஹெல்த்கேர் நிறுவனமான அபோட்,

கிராப் (Grab)

மைக்ரான் டெக்னாலஜி,

ஏஐஏ மற்றும்

ஜேபி மோர்கன் சேஸ்.

ஆகிய நிறுவனங்களும் முதன் முறையாக டாப் 15-ல் இடம் பிடித்துள்ளன.

Related posts