TamilSaaga

தனுஷின் VIP பட பைக்கிற்கே Tough கொடுத்த சிங்கப்பூரர்.. ஒரே மாதத்தில் 2000 கிலோமீட்டர் பயணம் – தாய்லாந்தை சுற்றி வலம்வரும் ஒரு Free Bird

இயற்கையை ரசிக்கும் ஆயிரமாயிரம் பாடல்கள் உண்டு இந்த உலகில், தனியொரு ஆளாக இந்த இயற்கை அழகை எந்தவித கலவையும் இல்லாமல் சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற ஆவலும் நம் அனைவரிடமும் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதைத்தான் செய்து வருகின்றார், நமது சிங்கப்பூரர் ஒருவர் ஆனால் இயற்கை அன்னையின் அந்த அழகை ரசிக்க அவர் தேர்ந்தெடுத்தது, பெரிய வாகனமோ, வேகமாக பைக்கோ, விலை உயர்ந்த கார்களோ அல்ல. அவர் இயற்கை அழகை சுற்றிப்பார்க்க எடுத்து சென்றது VIP படத்தில் தனுஷ் வைத்திருக்கும் LUNA போன்ற உருவம்கொண்ட ஒரு சைக்கிள் தான்.

சிங்கப்பூரர் ஆண்ட்ரூ லீயின் சாலைப் பயணமாக, சுமார் ஒரு மாதமாக தாய்லாந்து பகுதியை சுற்றிவருகின்றார். அதுவும் அவருடைய நம்பகமான அந்த மிதிவண்டியில். 57 வயதான அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ஃபூகெட்டில் பல நாட்கள் Diving செய்து நாட்களை சந்தோஷமாக கடத்திய நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தனது பயணத்தைத் துவங்கியுள்ளார்.

பாலியல் குற்றம் செய்யும் எண்ணமே இனி வரக்கூடாது.. பாதிக்கப்படும் அனைவரையும் பாதுகாக்க “புதிய நடவடிக்கை” – அமைச்சர் சண்முகம் அதிரடி!

அவரது குடும்பம் மீண்டும் சிங்கப்பூர் திரும்ப, அவர் மட்டும் தனியே இந்த பயணத்தை துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பெருந்தொற்று அவரை மிகவும் சோர்வடைய செய்தது என்றும் அதன் காரணமாகத்தான் தற்போது இந்த பயணத்தை அவர் மேற்கொள்கிறார் என்றும் Andrewவின் மனைவி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Andrew Lee சிங்கப்பூரில் இருக்கும்போதும் வாரத்திற்கு இரண்டு முதல் ஐந்து முறை சைக்கிள் ஓட்டுவார் என்றார் அவர். அதுவும் குறைந்தது 30 முதல் 50 கிலோமீட்டர் வரை அவர் சைக்கிள் பயணம் செய்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக.. சிங்கப்பூரில் 500 பேர் வரை ஒன்றுகூடி தொழுகை நடத்த MOM ஏற்பாடு – சக ஊழியர்களோடு அல்லாஹ்வை வணங்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்

ஒருநாளுக்கு 70 கிலோமீட்டர் என்ற கணக்கில் இதுவரை லீ சுமார் 1900 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை அவரது மிதிவண்டியில் கடந்துள்ளார். தான் தாய்லாந்து நாட்டை தேர்ந்தெடுத்ததற்கு எந்தவித தனிப்பட்ட காரணமும் இல்லை என்றும் andrew தெரிவித்துள்ளார். போகிற வழியில் கிடைக்கும் ஹோட்டல்களில் அவர் ஓய்வெடுத்து தனது பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.

தாய்லாந்து நாட்டில் நான் கடந்து செல்லும் கோவில்களில் என்னால் இயன்ற காணிக்கைகளை கொடுத்து செல்கின்றேன், தாய்லாந்து நாட்டின் இயற்கை அழகு என்னை மெய்மறக்க வைத்துள்ளது என்றும் அவர் கூறினார். சின்ன மிதிவண்டியில் 57 வயதில் தன்னை மறந்து பயணிக்கும் Andrewவின் இந்த வாழ்க்கையைத் தான் நாம் அனைவரும் விரும்புகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts