சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை இரவு (நவம்பர் 3) சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் கூடுதல் விளக்கு பொருத்துதல்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக 37 வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன என்று LTA தெரிவித்துள்ளது. செராங்கூன் மற்றும் கிள்ளான் சாலைகளுக்கு அருகில் உள்ள காவல்துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) இணைந்து நடத்திய நடவடிக்கையில், டின்ட் விசர்களுக்காக போக்குவரத்து காவல்துறை (TP) மூன்று சம்மன்களை வழங்கியது.
இன்று சனிக்கிழமை (நவம்பர் 6) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் “போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் பிற சாலைப் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வாகன ஓட்டிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க TP தயங்காது” என்று கூறியுள்ளது. மேலும் தங்கள் வாகனங்களில் மாற்றங்களைச் செய்ய விரும்புபவர்கள், OneMotoring இணையதளத்தில் உள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்குகிறார்களா என்பதைச் சரிபார்க்குமாறு LTA அறிவுறுத்துகிறது.
புதன்கிழமையன்று தடுத்து நிறுத்தப்பட்ட வாகன ஓட்டிகளின் வீடியோக்கள் ஆன்லைனில் பரவி வருகின்றன, வியாழன் (நவம்பர் 4) இரவு இந்த கண்ணொளி வெளியானதிலிருந்து 1,44,000 பார்வைகளைப் அந்த காணொளி பெற்றுள்ளது.