TamilSaaga

சத்தம் இல்லாமல் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய மானாமதுரை வீரபெருமாள்… தேசிய விருது வழங்கி கௌரவிக்கும் இந்திய ரயில்வே!

ரயில் பயணத்தின் பொழுது தண்டவாளத்தில் சிறு விரிசல் ஏற்பட்டாலும் அது ரயிலில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கும் அளவிற்கு ஆபத்து வாய்ந்தது. இந்நிலையில் அப்படி ஒரு பெரிய ஆபத்து நடக்க விடாமல் அனைத்து உயிர்களையும் காப்பாற்றியுள்ளார் மதுரை சேர்ந்த ரயில்வே ஊழியர் வீரப்பெருமாள்.

எனவே இவருக்கு விருது வழங்கி கௌரவிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளராக இவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பணிக்கு வந்த பொழுது ரயில் தந்தவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை இவர் உரிய நேரத்தில் கண்டறிந்தார்.அதோடு மட்டுமல்லாமல் விரைவாக செயல்பட்டு அந்த பாதையின் வழியே வரவிருந்த ரயிலை உடனடியாக தடுத்து நிறுத்தினார்.

எனவே பெரும் ஆபத்திலிருந்து பயணிகள் காப்பாற்றப்பட்டனர். எனவே ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ஊழியருக்கு கொடுக்கப்படும் தேசிய விருதுக்கு வீரப்பெருமாளை ரயில்வே துறை பரிந்துரைத்துள்ளது. இதற்கு முன்பாக ரயில்வே டிக்கெட்டுகளை முறைகேடாத பதிவு செய்ததை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டது .இந்நிலையில் இந்த வருடம் மானாமதுரையை சேர்ந்த வீர பெருமாளுக்கு விளங்கி கௌரவப்படுத்த உள்ளது.

Related posts