TamilSaaga

“சிங்கப்பூர் யிஷூனில் விபத்து” : இடிந்து விழுந்த கூரை – 2 பாதசாரிகள் மற்றும் ஓட்டுநருக்கு காயம்

சிங்கப்பூரில் இன்று மதியம் 1 மணியளவில் யிஷுன் MRT நிலையத்திற்கு வெளியே டவர் ட்ரான்சிட் பேருந்து விபத்துக்களான நிலையில் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.
சிங்கப்பூர் போலீஸ் படையும் உடனடியாக சம்பவ இடத்திற்கு தகவலறிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சனிக்கிழமை (நவம்பர் 6) யிஷுனில் உள்ள ஒரு டாக்சி ஸ்டாண்ட் தங்குமிடம் மீது இரட்டை அடுக்கு பேருந்து மோதியது. இந்த விபத்தில் 63 வயதான டவர் ட்ரான்சிட் டிரைவர் மற்றும் 64 மற்றும் 60 வயதுடைய இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

பேருந்து சேவை 969ஐ உள்ளடக்கிய இந்த விபத்தில் யிஷூன் அவென்யூ 2ல் உள்ள கட்டமைப்பு பகுதி இடிந்து விழுந்தது. டாக்ஸி ஸ்டாண்ட் யிஷுன் MRT ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் உள்ளது, பேருந்து டம்பைன்ஸிலிருந்து உட்லண்ட்ஸுக்குப் பயணித்துக் கொண்டிருந்தது. காயமடைந்த இரண்டு பெண்களும் பாதசாரிகள் என்று போலீசார் ஊடக அறிவிப்பில் தெரிவித்தனர்.

அமைச்சரின் முகநூல் பதிவு

மதியம் 1 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததாகக் கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மூவரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தனர்.

டவர் டிரான்சிட் பேருந்து நடத்துனர், பேருந்து கேப்டன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் தகவல் வெளியாகியுள்ளது. “காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பு கொண்டு விசாரணையில் அதிகாரிகளுக்கு உதவுகிறோம் என்றும் டவர் டிரான்சிட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் உள்துறை மற்றும் தேசிய மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த துணையமைச்சர் மற்றும் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

Related posts