சிங்கப்பூரில் வட்டார்லூ சாலையில் அமைந்திருக்கக்கூடிய 140 ஆண்டுகள் பழமையான ஒரு அழகிய கோயில் தான் அங்குள்ள கிருஷ்ணர் ஆலயம்.
ஆலய வரலாறு:
இந்த கிருஷ்ணர் கோயிலானது 1870 ஆம் ஆண்டு கிருஷ்ணர் ருக்மணி தேவியுடன் இருப்பதாக அமைக்கப்பட்டது.
சிங்கப்பூருக்கு தொழில் நிமித்தமாக வந்தவர்கள் அந்த பகுதியில் ஒரு ஆலமரத்தின் அடியில் கிருஷ்ணர் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். பின்பு அந்த இடத்தில் கோயில் கட்ட முடிவெடுத்து கட்டினார்கள்.
அவர்கள் வசித்த பகுதியில் இந்து மக்களை விரிவுபடுத்தும் வகையில் இந்த கோயிலை தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து அங்கு வசித்த மக்கள் கட்டினார்கள்
1904 ஆம் ஆண்டில் தான் இந்த கோயிலில் கிருஷ்ணருக்கான கருவறை கட்டப்பட்டது. அதன் பிறகாகவே 1935 ஆம் ஆண்டில் கோயிலை சுற்றி சுவர் எழுப்பப்பட்டது.
இந்த கோயிலின் நிர்வாகியாக இருந்த பக்கிரிசாமி என்பவர் இந்த கோயில் மேம்பாட்டில் முக்கிய பங்கினை வகித்தார்.
இந்த கோயிலுக்கு மிக அருகில் சீன மதத்தை சேர்ந்தவர்களின் கோயிலும் காணப்படுகிறது. அதனால் இந்த கோயிலுக்கும் சீன பக்தர்கள் வந்து கிருஷ்ணரை தரிசனம் செய்கிறார்கள்.
இந்த கோயிலில் நடைபெறும் அனைத்து பண்டிகைகள், திருவிழாக்கள் இஸ்கான் எனும் சர்வதேச கிருஷ்ணா இயக்கம் வழிகாட்டுதல் அடிப்படையில் நடைபெறுகிறது.