TamilSaaga

சிங்கப்பூரில் பிடிக்காத வேலை… Resign செய்ய முடியுமா? முதலாளிகள் முரண்டுபிடித்தால் என்ன நடக்கும்… Complete Report

வெளிநாட்டில் சென்று வேலை செய்தால் வாழ்க்கை முன்னேறி விடும் என்ற எண்ணத்தில் தான் பலரும் ஒவ்வொரு நாளும் சாங்கி விமான நிலையத்தில் வந்து இறங்குகின்றனர். அவர்களின் ஆசை என்னவோ எப்படியாவது வாழ்க்கை நன்றாக அமைந்து விடும் என்பதே. இதில் பலருக்கு இது சரியாக நடந்து விடுகிறது. சிலருக்கு இதில் மிகப்பெரிய பிரச்னை உருவாகி விடுகிறது. சிலருக்கு மொத்த வாழ்க்கை கூட பறிப்போகும் நிலை வருகிறது.

அப்படி பிடிக்காமல் சிங்கப்பூர் வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு அந்த கம்பெனியை விட்டு வெளியேற என்ன செய்யலாம் என்ற குழப்பமே நீடிக்கும். அதில் எதுவும் சிக்கல் வந்துவிடுமோ என்ற பயத்திலேயே தொடர்ந்து அந்த கஷ்டத்தில் வேலை சென்று வரும் நபர் நீங்களாக இருந்தால் இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 2023ல் எந்த துறையில் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது? அது சரி இந்தியால மதிக்கிறதே இல்லை.. இங்க லட்சத்தில் சம்பாரிக்கும் அந்த பாக்கியசாலிகள் யார் தெரியுமா?

சிங்கப்பூரில் வேலை பார்க்க எக்கசக்கமாக ஊழியர்கள் வெளிநாட்டில் இருந்து வருபவதற்கு காரணம் இங்கு இருக்கும் பாதுகாப்பு கட்டுபாடுகள் தான். வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் சரியான அணுகுமுறையில் வாழ்க்கை முறையை வகுத்து இருக்கிறது. அதனால் முதலில் இங்கு சட்ட சிக்கல் என்பதே இருக்காது. உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை உங்களால் சட்ட ரீதியாக வாழ முடியும். அதற்கு நாடும் உதவி புரியும்.

முதலில் சிங்கப்பூர் வர நல்ல ஏஜென்ட்டை பிடித்து வேலையை தேட சொல்லுங்கள். முடிந்த வரை எதோ ஒரு வேலை எனக் கிடைத்தால் போதும் என்ற மனநிலையை விடுங்கள். முறையாக உங்களுக்கு நன்கு பழக்கமான துறையில் வேலை தேட சொல்வதே சிறந்தது. அப்பொழுது தான் அந்த வேலையின் சூழ்நிலை உங்களுக்கு முன்னெரே பழக்கமானதாக இருக்கும். சரி அப்படியும் ஒரு வேலைக்கு சென்று திடீரென வேலை பிடிக்கவில்லை என்றாலோ இல்லை வேறு கம்பெனிக்கு மாற இருக்கிறீர்கள் என்றாலோ அதற்கு முதலில் முறையாக resign செய்ய வேண்டும் என்பதை ஹெச்.ஆரிடம் அறிவித்து விடுங்கள்.

அதன்பின்னர், கம்பெனிக்கும் உங்களுக்குமான வேலைக்கான ஒப்பந்தம் மூன்று வழிகளில் ஒன்றன் மூலம் முடிக்கப்படலாம். நீங்கள் Resign செய்ய நினைக்கும் போது, உங்க கம்பெனி உங்களை வேலையில் இருந்து நிறுத்தும் போது அல்லது உங்களுக்கான காண்ட்ராக்ட் முடிவுக்கு வரும் போது. அதனால் நீங்க resign செய்கிறேன் எனச் சொல்லும் போது உங்க கம்பெனி நிர்வாகம் உங்களின் வேண்டுக்கோளை நிராகரிக்க முடியாது.

இதையும் படிங்க: அம்மா என்னால சாப்பிடாம இருக்க முடியல… முதல் நாள் ரமலான் விரதத்தால் கலங்கிய சிங்கப்பூர் சிறுவன்… இட்ஸ் ஓகே கண்ணா கன்னம் தட்டிய அன்னை!

இதன்பின்னர், முறையாக நீங்கள் notice காலத்தினை முடித்துவிட்டோ அல்லது இழப்பீடு தொகையை கட்டி உடனடியாகவோ வேலையில் இருந்து வெளியேற முடியும் என்று கூறப்படுகிறது. இதை முதலாளிகள் தடுத்தால் அது சிங்கப்பூர் சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. முதலில் Resign செய்ய இருப்பதை உங்களின் வேலைக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையை கொண்டு கடிதம் ஒன்றில் எழுதி ஹெச் ஆரிடம் ஒப்படையுங்கள். உங்களின் வருட கணக்கினை கொண்டு நோட்டீஸ் காலத்தில் கூட கழித்து கொள்ள முடியும்.

அப்படி முறையாக கடிதம் கொடுக்காமல் notice காலத்தினையும் நீங்கள் முடிக்காமல் வெளியேற விரும்பினால் கம்பெனிக்கு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக கொடுக்க வேண்டியது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

மேற்கூறிய இரண்டு வழிகளை தாண்டி ஊழியர் வேலையை சரியாக செய்தும் உங்களின் கம்பெனி திடீரென நடத்தையை காரணம் காட்டி உங்களின் வேலையை பறித்து உங்களை நீக்கினால் https://www.tal.sg/tadm/know-your-options என்ற லிங்கில் சென்று புகார் அளிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts