TamilSaaga

சிங்கப்பூர் Keppel Club நீச்சல் குளம் : சடலமாக மிதந்த பெண்மணி – இயற்கை மரணமா? அல்லது வேறு காரணமா?

சிங்கப்பூரில் கெப்பல் கிளப்பில் உள்ள நீச்சல் குளத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 5) மாலை சுயநினைவின்றி காணப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 7.50 மணியளவில் சந்தேகத்திற்கிடமான நிலையில் நீரில் மூழ்கி கிடந்த பெண் குறித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு மயக்கமடைந்த நிலையில் கிடந்த 52 வயது பெண் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Exclusive : “என் அப்பா நீங்க தானா?” – வெளிநாட்டில் வேலை பார்க்கும் அப்பாக்கள் அனுபவிக்கும் சாபம் இது

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண், பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள கெப்பல் கிளப்பின் முகவரியான 10 புக்கிட் செர்மின் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். கெப்பல் கிளப் சிங்கப்பூரின் பழமையான கன்ட்ரி கிளப்களில் ஒன்றாகும்.

மேலும் இந்த நீச்சல் குளம் என்பது தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த நீச்சல் குளம் அருகில் ஒரு சிறிய குழந்தைகள் பயன்படுத்தும் குளமும் உள்ளது என்று கூறப்படுகிறது. இரண்டு குளங்களும் அந்த கிளப்பின் விளிம்பில், கடலைக் பார்த்த வகையில் அமைந்துள்ளன.

கொரோனாவில் இருந்து மீண்ட தொழிலாளர்கள் பணியிடத்தில் “GP memo” சமர்ப்பிக்க தேவையில்லை – சிங்கப்பூர் அரசு முக்கிய அறிவிப்பு

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், போலீசார் இந்த பெண் இறந்த விஷயத்தில் முறைகேடுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளது. இருப்பினும் மேற்கொண்டு விசாரணைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts