TamilSaaga

அரசு ஊழியர்களின் மனதை குளிரவைத்த சிங்கப்பூர்.. ‘போனஸ்’ அறிவிப்பு – அப்படியே வெளிநாட்டு ஊழியர்களையும் கவனிக்கலாமே.. அவங்களுக்கும் குடும்பம் இருக்கே!

சிங்கப்பூரில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் 0.35 மாத மத்திய ஆண்டு போனஸைப் பெறுவார்கள் என்று பொது சேவை பிரிவு (PSD) நேற்று (ஜூன் 20) அறிக்கை வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 3 முதல் 5 சதவிகிதம் அளவு அதிகரிக்கலாம் என்பதால், இந்த போனஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை அரசு ஊழியர்கள் 2021 இல் 0.3 மாத போனஸைப் பெற்றனர்.

ஜூனியர் ஊழியர்களுக்கு போனஸை தாண்டி S$200 முதல் S$400 வரை கிடைக்கும்.

ஜூனியர் ஊழியர்களுக்கான ஒரு முறை கட்டணம் 2021 இல் வழங்கப்பட்ட S$350 முதல் S$700 வரை குறைவாக உள்ளது.

மேலும் படிக்க – FB, Twitter, TikTok… குடுமியை ஒட்ட நறுக்கும் சிங்கப்பூர் – ‘Content’ பைத்தியங்களை தெளிய வச்சு வச்சு அடிக்க புதிய சட்டம்!

MX13(I) மற்றும் MX14 க்கு சமமான கிரேடுகளில் உள்ள அரசு ஊழியர்கள் S$200 கூடுதலாக ஒரு முறை கட்டணத்தைப் பெறுவார்கள்.

MX15 மற்றும் MX16 க்கு சமமான கிரேடுகளில் உள்ளவர்கள் மற்றும் செயல்பாட்டு ஆதரவு திட்டத்தில் (OSS) III முதல் V வரை உள்ளவர்களுக்கு S$400 ஒரு முறை செலுத்தப்படும்.

பொதுத்துறை தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து போனஸ் தொகை முடிவு செய்யப்பட்டதாக PSD தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அரசின் சலுகைகள் சிங்கை மக்களுக்கு தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், சிங்கையின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் வெளிநாட்டு ஊழியர்களே. குறிப்பாக இந்தியர்கள். அதற்காக அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் போனஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதேசமயம், முடிந்த அளவு அவர்களுக்கும் இதுபோன்று ஏதாவது திட்டங்களை அறிமுகம் செய்தால், அதன் மூலம் அவர்களுக்கு ஏதாவது நன்மைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதே நமது வேண்டுகோள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts