TamilSaaga

தற்காலிக ஒப்பந்தம் செய்யவில்லை? : தமிழகம் திரும்ப முடியாமல் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தவிக்கும் மக்கள்

உலக அளவில் பரவி வரும் இந்த நோய் இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது, பல லட்சம் பேரை வேலை இழக்க செய்துள்ளது. இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் இந்த நோயின் தாக்கம் குறையவில்லை. இந்த சூழ்நிலையில் விமான போக்குவரத்து என்பதும் மிகக் கடுமையான ஒன்றாகவே இருந்து வருகின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமது சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு செல்ல வேண்டிய மக்கள் உரிய நேரத்தில் விமானம் கிடைக்காத காரணத்தினால் தாயகம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் விமான சேவை தொடர்பாக தற்காலிக ஒப்பந்தங்கள் ஏதும் செய்து கொள்ளாததால் தமிழக மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர் என்ற கருத்து பொதுவாகவே உள்ளது. அண்டை நாடான இந்தியாவை பொருத்தவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பன்னாட்டு விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது இந்திய நாட்டின் மத்திய அரசு. இந்த நிலையில் மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நாடுகளுடன் ஏர் டிராவல்ஸ் போர்ட், ஏர் பபுள்ஸ் என்ற ஒப்பந்தத்தை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி செய்துகொண்டது.

ஆனால் இந்த ஒப்பந்தமானது மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்படவில்லை கூறப்படுகிறது. இதனால் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் செய்தி மட்டுமே இந்த நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இதுகுறித்து சிங்கப்பூரிலுள்ள நாமக்கல்லைச் சேர்ந்த மென்பொறியாளர் மைதிலி கிருஷ்ணசாமி என்பவர் இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துகொள்ள தாமதம் காட்டுவதால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து தமிழகம் வர வேண்டிய பயணிகள் எமிரேட்ஸ் கத்தார் ஏர்வேஸ் போன்ற 10 விமான சேவைகளை பயன்படுத்தி எமிரேட் கத்தார் துபாய் தொகை கூடும் போலியாக அதிக பயணம் கட்டணம் செலுத்தி ஊர் திரும்புகின்றனர்.

அதே நேரத்தில் நவம்பர் மாதத்திற்கான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை டிக்கெட்களும் தீர்ந்துவிட்ட நிலையில் டிசம்பர் மாதத்திற்கான விமான புக்கிங் இன்னும் தொடங்கவில்லை. அவ்வப்போது கிடைக்கும் சிறப்பு விமானங்களும் அறிவிக்கப்பட்ட ஒரு சில மணிநேரத்தில் தீர்ந்து விடுவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆகையால் இந்திய அரசு விரைந்து ஒரு முடிவு எடுத்து சிங்கப்பூர் மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் சுலபமாக தாயகம் திரும்ப அனுகூலம் செய்யவேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக உள்ளது.

Related posts