TamilSaaga

சிங்கப்பூரில் 2022 ஹரி ராயா பொது விடுமுறைகளில் மாற்றம் : விளக்கமளித்தது சிங்கப்பூர் “Muis” அமைப்பு

சிங்கப்பூரில் வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் புதிய அளவுகோல்களுடன், அடுத்த ஆண்டு ஹரி ராயா பொது விடுமுறைகள் முன்னதாக ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டதற்குப் பதிலாக அடுத்து வரும் தேதிகளில் நாடாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 21) வெளியான ஒரு அறிக்கையில், சிங்கப்பூர் இஸ்லாமிய மத கவுன்சில் (Muis) ஹரி ராயா புசா மே 3ம் தேதியம் ஹரி ராயா ஹாஜி ஜூலை 10ம் தேதி நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஹரி ராயா ஹாஜி அடுத்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை ஜூலை 10ம் தேதி வரும் நிலையில், ஜூலை 11 பொது விடுமுறையாக அனுசரிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹரி ராயா புடிசா, ஹரி ராயா ஐடில்ஃபித்ரி என்றும் அழைக்கப்படுகிறது, ரமலான் நோன்பு மாதத்தின் முடிவை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹரி ராயா ஹாஜி புனித நகரமான மக்காவுக்கு வருடாந்திர ஹஜ் யாத்திரையின் முடிவைக் குறிக்கிறது.

புருனே தாருஸ்ஸலாம், இந்தோனேசியா குடியரசு, மலேசியா மற்றும் சிங்கப்பூர் குடியரசின் மிக உயர்ந்த இஸ்லாமிய அதிகாரிகள் வரும் 2022ம் ஆண்டு முதல் இஸ்லாமிய நாட்காட்டியை நிர்ணயிப்பதற்கான வானியல் கணக்கீட்டின் திருத்தப்பட்ட அளவுகோல்களை ஏற்க ஒப்புக்கொண்டனர் என்று Muis தெரிவித்துள்ளது. “பல வருட ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்த பிறகு உறுப்பு நாடுகளிடையே இந்த உடன்பாடு எட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது”எனவே இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்லாமிய நாட்காட்டியில் உள்ள முக்கிய தேதிகள் இப்பகுதியில் சீரமைக்கப்படும் என்று Muis தெரிவித்தது.

ஏப்ரல் 6ம் தேதி, மனிதவள அமைச்சகம் அடுத்த ஆண்டு ஹரி ராயா பூசா மே 2 அன்று தொழிலாளர் தினத்திற்குப் பிறகு வரும் என்றும், மே 3 பொது விடுமுறையாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts