TamilSaaga

வர்த்தக நிறுவன ஊழியர்கள் ; 14 நாட்களுக்கு ஒரு முறை கட்டாய கொரோனா பரிசோதனை

தளர்வுகளுடன் நாளை (ஜீன்.21) முதல் இயங்க தயாராகும் உணவகங்கள், பானக்கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், உடற்பிடிப்பு நிலையங்கள்,சலூன் மற்றும் ஒப்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் ஊழியற்களுக்கு 14 நாட்களுக்கு ஒரு முறை கட்டாய கோவிட் பரிசோதனை என அமைச்சுகளின் பணிக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சுய பரசோதனையை மேற்கொள்ள முதலாளிகள் தங்கள் மூத்த ஊழியர்களை பயிற்சிக்கு அனுப்பி பரிசோதனையை கற்றுக்கொண்டு அவர்களை வைத்து மற்ற ஊழியர்கள் பரிசோதனை செய்ய உதவலாம். இதற்கான பயிற்சி மூன்று மாதங்களுக்கு இலவசமாக நடைபெறும். மேலும் இதற்கு தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கு சுய பரிசோதனை கருவிகள் வழங்கப்படும்.

தங்களால் இந்த பயிற்சிக்கு ஊழியர்களை உட்படுத்த முடியாத சூழலில் இருக்கும் நிறுவனங்களுக்காக தனியாக பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டும் என்றும் முதற்கட்டமாக தேக்கா மற்றும் ஈசூனிலும் பரிசோதனை நிலையம் துவங்கப்படும்.

முதியோருக்கான சேவை செய்யும் பராமரிப்பு நிலையங்களுக்கு வருகை மீண்டும் துவங்கப்படும் போது அவர்களுக்கும் இந்த பரிசோதனை செய்யப்படும்.

முகக்கவசம் அணியாமல் பயன்பெறக் கூடிய சில வர்த்தக சேவைகளுக்காக வரும் வாடிக்கையாளர்களுக்கு பணி செய்யும் ஊழியர்கள் மூலம் தொற்று பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜீலை மத்தியில் இந்த பரிசோதனைகள் கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சகத்தின் பணிக்குழு கூறியுள்ளது.

Related posts