TamilSaaga

“குடிக்கும் தண்ணீரில் கழிவு நீர்” : சிங்கப்பூரில் பணிசெய்து வரும் பணிப்பெண்ணுக்கு 4 வார சிறை

சிங்கப்பூரில் தான் பணிப்பெண்ணாக வேலைபார்த்த வீட்டின் முதலாளியின் முக அலங்கார பொருட்களை உபயோகித்தது மற்றும் அந்த குடும்பத்தினர் தண்ணீர் அருந்தும் தண்ணீர் ஜாடியில் கழிவறையில் பயன்படும் நீரை நிரப்பி வாய்த்த குற்றத்திற்காக வீட்டு வேலைக்காரருக்கு நேற்று திங்கள்கிழமை (செப்டம்பர் 27) அன்று நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோசர் ரோஸ் மக்தானோங், என்ற 32 வயதான பிலிப்பினோ நாட்டை சேர்ந்த அந்த பணிப்பெண் சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளருக்காகவும், அவரது கணவர் மற்றும் அவர்களின் இரண்டு வயது மகனுக்காகவும் மரைன் பரேடைச் சுற்றியுள்ள காண்டோமினியம் பிரிவில் பணிபுரிந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், கோசரின் முதலாளி தனது படுக்கையறையில் அவர்களது ஒப்பனை கிரீம்கள் வழக்கத்தை விட வேகமாக குறைந்து வருவதை கவனித்துள்ளார். இதனையடுத்து அந்த முதலாளி தனது சமையலறை மற்றும் படுக்கையறையின் நடைபாதை, அலமாரி ஆகியவற்றைக் கவனிக்க சிசிடிவி கேமராக்களை நிறுவத் தொடங்கினார்.

இதனையடுத்து கோசர் கடந்த ஆண்டு ஜூலை 29 முதல் செப்டம்பர் 8 வரை 28 முறை அந்த கிரீம்களைப் பயன்படுத்துவது CCTV கேமராவில் பதிவானது. இதனால் கோசரின் முதலாளி அவரை வேலைவாய்ப்பு நிறுவனமான ஜேபிபி வேலைவாய்ப்பு முகமைக்கு அழைத்துச் சென்று அவரை வேலையை விட்டு வெளியேற்ற முடிவு செய்தார். அங்கு நடந்த நேர்காணலில் அவர் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டார்.

மேலும் அந்த பணிப்பெண்ணுக்கு அந்த முதலாளியும் சில சங்கடங்களை ஏற்படுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது அலைபேசியை தன் வசம் வைத்துக்கொண்டு அவர் தனது குடும்பத்துடன் தொடர்புகொள்ளமுடியாமல் செய்ததாக கூறப்படுகிறது.

Related posts