TamilSaaga

கடகடவென உயரும் டிக்கெட் விலை… சீனப்புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்ல டிக்கெட்டை முன்கூட்டியே புக் செய்யுங்கள்!

சிங்கப்பூரில் சீனபுத்தாண்டானது எப்பொழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பெரும்பாலான சிங்கப்பூர் கம்பெனிகள் சீனப் புத்தாண்டை முன்னிட்டு நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை விடுமுறை வழங்கும் என்பதால் அனைத்து ஊழியர்களும் விடுமுறையை முன்கூட்டியே திட்டமிடுவது வழக்கம். சிங்கப்பூரில் சீனா நாட்டைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் வேலை செய்வதால் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் பொழுது அங்குள்ள நம் நாட்டு ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைக்கும்.

சீன புத்தாண்டிற்கு மூன்று மாதமே இருக்கும் நிலையில் பெரும்பாலான மக்கள் ஊருக்கு செல்வார்கள் என்பதால் விமான டிக்கெட்டுகளின் விலையானது உயர்ந்துள்ளது.மக்கள் புத்தாண்டையொட்டி தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு உள்ளதால் விமான டிக்கெட் விலை உயர் தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் விமானங்களின் டிக்கெட் விலை அதி வேகமாக உயர்ந்துள்ளது. கோலாலம்பூருக்கு செல்வதற்கான விமான டிக்கெட்டின் விலை 600 டாலருக்கு மேல் இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சில விமான நிறுவனங்களின் டிக்கெட் விலையானது வழக்கமான விலையை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் ஊருக்கு செல்ல திட்டமிட்டால் பயணத்தை திட்டமிட்டு உடனடியாக டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள. இனி வரும் காலங்களில் டிக்கெட் விலையானது இதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Related posts