TamilSaaga

“சர்வதேச மாணவர்களை வரவேற்கும் ஆஸ்திரேலியா” : Travel Bubble மூலம் ஆஸ்திரேலியா சென்ற சிங்கப்பூர் மாணவர்கள்

இந்த மாதம் தொடங்கி ஆஸ்திரேலியாவின் எல்லைகளை படிப்படியாக மீண்டும் திறப்பதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இப்போது மெல்போர்ன் அல்லது சிட்னிக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமின்றி உள்நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான Travel Bubble நடைமுறைக்கு வந்ததால், சர்வதேச பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று சிங்கப்பூரில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவை வந்தடைந்தது.

இதையும் படியுங்கள் : “நவம்பர் இறுதியில் மலேசியாவுடனான நில எல்லை திறக்கப்படலாம்”

சிங்கப்பூரில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இப்போது மெல்போர்ன் அல்லது சிட்னிக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமின்றி அனுமதிக்கப்படுகிறார்கள். பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க ஆஸ்திரேலியா தனது சர்வதேச எல்லைகளை கடந்த மார்ச் 2020ல் மூடியது குறிப்பிடத்தக்கது. 39 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்களின் தலைமை நிர்வாகி கேட்ரியோனா ஜாக்சன், கடந்த ஆண்டு நவம்பரில் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் திரும்பிய பிறகு, தற்போது சிங்கப்பூரில் இருந்து மேலும் சில மாணவர்கள் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

“இந்த ஆரம்ப எண்ணிக்கை சிறியவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் அவை இன்னும் பல மாணவர்களை வகுப்புகளுக்கும் எங்கள் சமூகங்களுக்கும் விரைவில் திரும்ப அனுமதிக்கும் நோக்கத்தின் தெளிவான சமிக்ஞையாகும்” என்று ஜாக்சன் கூறினார். ஆஸ்திரேலியாவிற்கு வெளியே சுமார் 1,30,000 சர்வதேச மாணவர்கள் எஞ்சியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

தொற்றுநோய்க்கு முன், சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் மூன்றாம் நிலைக் கல்வி மாணவர்களில் 21% ஆக இருந்தனர். இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் சராசரியாக 6% ஆக இருந்தது.

Related posts