TamilSaaga

Skill இல்லாமல் சிங்கப்பூர் போகணும்… அதே சம்பளத்தில் போகணும்… கம்மி Agent கட்டணத்தில் போகணும்… அப்போ இந்த பாஸில் தான் போகணும்!

அடிப்படையில் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல நினைக்கும் பலர் படிக்காமல் தான் செல்வார்கள். அவர்களுக்கு சொந்த ஊரில் கிடைக்கும் சம்பளத்தினை விட வெளிநாட்டில் கொஞ்சம் அதிக சம்பளம் கிடைக்கும். இதனால் குடும்பத்தின் கஷ்டத்தினை குறைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் செல்வார்கள். அப்படி அவர்கள் செல்லும் வேலை ஏகப்பட்ட கஷ்டத்துடன் இருந்தாலும் பிள்ளைகளுக்காக, குடும்பத்துக்காக அதை சமாளித்து கொண்டு தான் தொடர்ந்து வேலை செய்வார்கள்.

சிங்கப்பூரில் பல வகையான பாஸ்கள் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு அப்ளே செய்ய கண்டிப்பாக ஏஜென்ட்டின் உதவி தான் வேண்டும். அதற்கு அவர்கள் கட்டணமும் லட்சத்தில் தான் கேட்பார்கள். 1 லட்சத்தில் தொடங்கி 5 லட்சம் வரை ஏஜென்ட் கேட்பதாக கூறப்படுகிறது. இதில் Skilled டெஸ்ட் அடித்து சென்றால் பல வேலைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு பயிற்சி, ரிசல்ட் பின்னர் கம்பெனி என 4 மாதங்கள் வரை கூட நேரம் எடுக்கும்.

இதையும் படிங்க: இந்திய லைசன்ஸ் இருக்கா? அப்போ இந்த துறையில் டிரைவர் வேலை கிடைக்கும்? தரமான சம்பளம்.. சிங்கப்பூரில் லைசன்ஸ் எடுக்க தேவையில்லை!

உடனே சிங்கப்பூர் செல்லவும் கட்டணம் கம்மியாக கொடுக்கவும் இருக்கும் அடிப்படையான பாஸ் தான் PCM permit. இப்போது இந்த பாஸும் அதிக புழக்கத்தில் இருக்கிறது. பொதுவாக pcm permitல் வேலைக்கு வருபவர்கள் Process sector, Construction மற்றும் Manufacturing sectorல் இருப்பார்கள். இதற்கும் கம்பெனி தரப்பில் கோட்டா அளவுகள் கணக்கிடப்படும்.

PCMல் வேலைக்கு ஊழியர்களை எடுக்கும் போது 18 வயதுக்கு மேலுள்ள தகுதியுடைய நாட்டினரை மட்டுமே எடுக்க முடியும். அதிகபட்சமாக இந்த பாஸில் வரும் ஊழியர்களின் விசா இரண்டு ஆண்டுகளுக்கு செல்லும்படியாகுமாறு வைத்திருப்பார்கள். தேவைப்பட்டால் அந்த நிறுவனமே அந்த விசாவினை நீட்டிக்கும். இல்லை வேறு சம்பளத்தில் வேறு கம்பெனிக்கு மாறிக்கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு. Basic skillல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் போது சிங்கப்பூரில் அவர்கள் 14 வருடங்கள் வேலை செய்ய முடியும். இதுவே higher skilled ஊழியர்களை PCM வேலைக்கு எடுக்கும் போது அவர்களால் 26 வருடம் மட்டுமே வேலை செய்ய முடியும்.

இதையும் படிங்க: இனி பல லட்சங்கள் குறையும்… வேலைக்கு வர ஏஜென்ட்டினை தேடி அலைய வேண்டாம்… careers finder வசதியை அறிமுகப்படுத்த இருக்கும் MOM!

இந்தியாவில் இருந்து ஒருவர் pcm permitல் வேலைக்கு வரும் போது அவர்கள் கீழே குறிப்பிட்டு இருக்கும் 13 வேலைகளில் மட்டுமே பணியமர்த்த படுவார்கள்.

*Electrical and Instrumentation works
*General fitting
*Machine fitting
*Metal Scaffolding
*Painting and blasting
*Plant civil works
*Plant equipment fitting
*Process pipefitting
*Refractory
*Rigging and material handling
*Rotating equipment fitting
*Thermal insulation
*Welding

இருந்தும், சில ஊழியர்களை PCM பெர்மிட்டில் வேலைக்கு எடுக்கும் போது அவர்களுக்கு அனுபவம் இருந்தால் டிரைவர் வேலையும் கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. PCM துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் முதல் சில வாரத்திற்குள் Safety கோர்ஸ் முடித்து இருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலைக்கு வரும் போது சம்பளம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 18 வெள்ளி இருக்கும். ஓடியும் 3 மணி முதல் 4 மணி நேரம் வரை கூட கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இதே அளவில் தான் skilled டெஸ்ட் முடித்து வரும் ஊழியர்களுக்கும் கொடுக்கப்படும். ஆனால் அவர்களுக்கு லெவி குறைவு என்பதால் சம்பளத்தில் பிடித்தம் இருக்காது. இந்த பெர்மிட்டில் தங்குமிடம், கரண்ட் இவற்றுக்கு பிடித்தம் இருக்கலாம்.

இதுமட்டுமல்லாமல் PCMல் வேலைக்கு சிங்கப்பூர் வந்துவிட்டால் இங்குள்ள இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து 3 நாட்களுக்குள் உங்களால் skill டெஸ்ட் முடித்து விடலாம் என்பது அதிக அட்வாண்டேஜாக பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts