TamilSaaga

‘சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடி?’ – ஒரே ஆண்டில் 200 மில்லியன் டாலர் அளவில் இழப்பு

சிங்கப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டினை காட்டிலும் சுமார் 65% அதிகமான மோசடி புகார்கள் காவல்துறைக்கு வந்த வண்ணம் உள்ளன. சென்ற ஒரே ஆண்டில் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோசடிகளின் மூலம் சுமார் 200 மில்லியன் டாலர் வெள்ளி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் நேற்று நடத்திய மெய்நிகர் காணொளியின் மூலம் நடத்திய நிதியில் குற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டபோது சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் டெஸ்மண்ட் டான் இந்த தகவலை கூறினார்.

மேலும் வங்கிகளுடைய வாடிக்கையாளர்கள் இந்தவிதமான மோசடிகளுக்கு ஆளாகாமல் தடுக்க மோசடி தடுப்பு குழு, சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்துடன் இணைந்து பணிபுரிந்து வருவதாக இந்த டெஸ்மண்ட் குறிப்பிட்டார்.

மேலும் மோசடிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அகற்ற வங்கிகளின் முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக வங்கிகள் சங்கம் அமைச்சகம் மோசடி தடுப்பு குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் வங்கிகளின் முன் களப்பணியாளர்கள் மொத்தம் மூன்று மில்லியன் வெள்ளி தொடர்பான 76 மோசடி முயற்சிகளை இடைமறித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts