TamilSaaga

“கொஞ்ச நாளாக கொளுத்திய வெயில்” : சட்டென்று மாறிய சிங்கப்பூர் வானிலை – எல்லோருக்கும் ஒரு Good News

சிங்கப்பூரில் இது மிகவும் வெப்பமான வாரமாக இருந்தது, பெரும்பாலான இரவு நேரங்களில் கூட வெப்பநிலை 10 மணிக்குப் பிறகும் 30 டிகிரி செல்சியஸை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தென்கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து வீசும் காற்று காரணமாக, கடலில் இருந்து சூடான மற்றும் ஈரப்பதமான காற்றை நிலத்தின் மீது கொண்டு வருகின்றது. குறிப்பாக தெற்கு சிங்கப்பூர் வெப்பமான வானிலையின் தாக்கத்தை அதிக அளவில் பெற்றது.

இந்நிலையில், சிங்கப்பூரில் இன்று அக்டோபர் 17 ஞாயிற்றுக்கிழமை, தீவின் பல பகுதிகளில் மழை பெய்தது. சிங்கப்பூரின் வானிலை சேவை மையத்தின் வலைத்தள தகவல்படி, சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் நண்பகலுக்கு மேல் கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த புயல் அதன்பிறகு மத்திய சிங்கப்பூருக்கு இடம்மாறியது, பூன் கெங் போன்ற பகுதிகளில் பிற்பகலில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல இடங்களில் மழை பெய்தாலும் பிற்பகல் 1:52 மணி வரை சில இடங்களில் வெப்பநிலை சூடாகவே உள்ளது. சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகள் இன்னும் 30°C க்கு அருகில் வெப்பநிலையில் உள்ளது. சாங்கியின் வானிலை நிலையம் அதிகபட்சமாக 31.5 ° C ஐப் பதிவு செய்கிறது.

Related posts