TamilSaaga

ஒரே இரவில் சிங்கப்பூரின் அடிமடியிலேயே கைவைத்த மலேசியா.. எதிர்பார்க்காத சிங்கை அரசு – மிகப்பெரும் அளவில் அடிவாங்கும் ‘சிக்கன்’ பிஸ்னஸ்

சிங்கப்பூர்: நேற்று திங்கட்கிழமை (மே 23), தங்கள் நாட்டில் அதிகரித்த கோழிகளின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையை சமாளிக்க ஜூன் மாதம் முதல் மாதம் 3.6 மில்லியன் கோழிகள் ஏற்றுமதி நிறுத்தப்படும் என்று மலேசியா தடாலடியாக அறிவித்தது.

இந்நிலையில், சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) நேற்று இரவு வெளியிட்ட அவசர அறிக்கையில், “கோழி இறக்குமதியாளர்கள் மாற்று இடங்களில் இருந்து கோழியின் இறக்குமதியை அதிகரிக்கவும், தற்போதுள்ள மலேசியா அல்லாத சப்ளையர்களிடமிருந்து frozen கோழிகளின் இறக்குமதியை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளது.

SFA தரவுகளின்படி, சிங்கப்பூர் 2021 இல் மலேசியாவில் இருந்து அதன் கோழி விநியோகத்தில் சுமார் 34 சதவீதம் அல்லது 73,000 டன்களை இறக்குமதி செய்தது.

மேலும் படிக்க – சுற்றித்திரிந்த கோழிகளை விரட்டி விரட்டி அடித்த வாலிபர்.. சிங்கப்பூர் இணையத்தில் வைரலான வீடியோ – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

2020 ஆம் ஆண்டில் தனிநபர் நுகர்வு 36 கிலோவுடன், சிங்கப்பூரில் மிகவும் பரவலாக உட்கொள்ளப்படும் இறைச்சியாகவும் கோழி உள்ளது.

சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் மலேசியாவின் அனைத்து கோழிகளும் உயிருள்ள கோழிகளாக வந்து, பின்னர் சிங்கப்பூரில் அறுக்கப்பட்டு Freezer-ல் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் மலேசியா கோழி ஏற்றுமதியை தடை செய்துள்ளதால், மிகப்பெரும் அளவில் சிங்கப்பூரில் வணிகங்கள் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

சிக்கன் பிரியாணி, சிக்கன் Fried Rice, சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் சூப் என்று பல வகை சிக்கன் அயிட்டங்களை பெயர் போன சிங்கப்பூரில் சிக்கனுக்கே தட்டுப்பாடு என்பது இதுவே முதன்முறையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts