தாய்லாந்து நாட்டில் உள்ள Chiang Mai என்ற பகுதியில் “க்ரீப்” என்ற உணவு பொருளை “Bra” அணியாமல் விற்பனை செய்து வந்த 23 வயது விற்பனையாளருக்கு, அவ்வூர் அதிகாரிகள் எச்சரிக்கை அளித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆலிவ்” என்றும் அழைக்கப்படும் அந்த 23 வயது விற்பனையாளர் சியாங் மாயின் ஜெட் யோட்-சியாங் கியாங் சாலையில் க்ரீப்ஸை விறு வியாபாரம் செய்து வருகின்றார். ப்ரா அணியாமல் பட்டன் அணியாத ஸ்வெட்டர் அணிந்து கொண்டுதான் அவர் தன் தொழிலைச் செய்கின்றார்.
பட்டாயா மெயிலின் கூற்றுப்படி, அவர் இந்த வழியில் ஆடை அணிவதை விரும்புவதாகவும், மேலும் க்ரீப்ஸை விற்க அவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் இந்த செயலை அனுமதிக்க மறுத்துள்ளனர். ஆலிவ் சாங் புவாக் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து எச்சரிக்கையைப் பெற்றதாக உள்ளூர் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவர் தான் அணியும் ஆடைகளில் மிகவும் “கவனமாக” இருக்க வேண்டும் என்றும் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் கலாச்சார அதிகாரி ஒருவரும் அவரை ப்ரா அணியச் சொன்னதாக கூறப்படுகிறது. சமீபத்தில், தாய்லாந்து நாட்டில் வசிக்கும் ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஒருவர் மேலாடையின்றிச் சாலையோரத்தில் ரொட்டிகளை விற்பனை செய்து அவ்வூர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.