சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசைப்படும் பலரும் ஒரே துறைகளையே தேர்வு செய்வார்கள். ஆனால் சிங்கப்பூரில் நீங்கள் வேலை செய்யும் இன்னும் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது. அதில் நீங்கள் சேர சில விஷயங்களை நீங்க கட்டாயமாக பாலோ செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது உங்கள் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சம்பளமும் நீங்க எதிர்பார்த்தவாறு அமையும்.
சிங்கப்பூரில் excavatorஐ இயக்கும் பணிகளில் இருக்கும் operatorஆக வேலைக்கு சேர கோர்ஸ் படிக்க வேண்டும். சிங்கப்பூரில் இருக்கும் அதிகாரப்பூர்வ மையங்களில் இணைந்து படிக்கலாம். உங்களுக்கு அருகில் இருக்கும் மையங்களை தேர்வு செய்வது நல்லது.
அந்த மையங்களில் முதலில் excavator operator கோர்ஸில் அட்மிஷன் போடுங்கள். இதற்கு உங்களிடம் கட்டணமாக 2000 முதல் 2100 சிங்கப்பூர் டாலர் வரை கேட்கப்படும். வகுப்புகள் 8 நாட்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். 9 வது நாளில் டெஸ்ட் முடித்து விடலாம். இந்த 8 நாள் முழு நேரமாக இருக்கும். இதனால் வார நாளில் தொடர்ந்து 8 நாளோ அல்லது 8 ஞாயிறுக்கிழமையோ வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்.
இதையும் படிங்க: சிங்கையில் வேலை செய்யும் ஊழியரா நீங்க… அப்போ நீங்க WICA பத்தி மிஸ் பண்ணாம தெரிஞ்சிக்கோங்க… ரொம்ப முக்கியமுங்கோ!
அட்மிஷன் போட்டாலும் ஸ்கில் கோர்ஸினை போல உடனடியாக வகுப்புகள் தொடங்கி விடாது. அதற்கு காத்திருக்கும் நேரமே 2ல் இருந்து 3 மாதங்கள் கூட ஆகும்.
பாதி நேரம் வகுப்புகள் கூட இருக்கும். அதை முடித்தவுடன் 9வது நாள் வகுப்பில் எக்ஸாம் நடத்தப்படும். இது எழுத்து தேர்வு மற்றும் பிராக்டிக்கல் என இரண்டும் இருக்கும். வகுப்புகள் ஆங்கிலத்தில் இருக்கும். தேர்வில் சாய்ஸ் டிக் செய்வது போல தேர்வுகள் நடக்கும்.
இது முடிந்தவுடன் சான்றிதழ் வாங்கிவிடலாம். ஆனால் இந்த கோர்ஸ் முடித்து விட்டால் உடனடியாக operator ஆகி விட முடியாது. இதை தொடர்ந்து PUP கோர்ஸ் முடிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக 300 சிங்கப்பூர் டாலர் கேட்கப்படும். இதை ஆன்லைனிலே முடித்து விடலாம். எந்த வகை ஸ்கில் முடித்தவர்களும் இந்த கோர்ஸில் சேரலாம்.
இதையும் படிங்க: Marine Shipyard சிங்கப்பூரில் துறையில் வேலைக்கு சேரணுமா? 1200 சிங்கப்பூர் டாலர் சம்பளமா? அதுக்கு முன்ன இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க
இந்த பணியில் இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 30 சிங்கப்பூர் டாலர்கள் அடிப்படை சம்பளமாக இருக்கும். மேலும் நைட் வேலை அதிகம் இருக்கும் என்பதால் ஓவர் டைமும் அதிகமாக கணக்கிடப்படும். இதனால் இந்த பணியில் இருப்பவர்களுக்கு சம்பளமாக 2000 சிங்கப்பூர் டாலர் வரை கூட கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.