சிங்கப்பூரில் மிகப்பெரிய தொகையாக சம்பளத்தினை கொடுக்கும் EPass. இந்த பாஸில் வரும் ஊழியர்களுக்கு இனி புதிய ஸ்கோரிங் திட்டத்தினை சிங்கை மனிதவளத்துறை எனப்படும் MOM அறிவித்து இருந்தது. வரும் செப்.23 முதல் நடைமுறையில் வர இருக்கும் இந்த திட்டம், குறித்த முக்கிய தகவல்கள் உங்களுக்காக.
இனி EPassல் சிங்கப்பூர் வேலைக்காக வருபவர்கள் Complementarity Assessment Framework (Compass)ன் தகுதிக்கான அடிப்படையில் 40 புள்ளிகள் பெற்று இருக்க வேண்டும். இந்த Compass மூலம் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வேலைக்காக வர இருக்கும் ஊழியர்கள் ரொம்பவே திறமையானவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் நல்ல திறமை இருக்கும். இதனால் சிங்கப்பூர் இன்னும் வளரும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த முறையில் தான் செப்டம்பர் 23, 2023 முதல் புதிய EPassகள் கொடுக்கப்படும். பாஸை புதுப்பிப்பவர்கள் அடுத்த செப்டம்பர் 23 முதல் இந்த நடைமுறையில் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சம்பளம், விண்ணப்பவரின் தகுதிகள் மற்றும் நிறுவனத்தின் மீதான மதிப்பீடு ஆகியவை வைத்து இந்த Compass மதிப்பிடப்படுகிறது.
நீங்கள் விண்ணப்பித்து இருக்கும் வேலைக்கான கம்பெனியின் மதிப்பிற்கு மேற்பட்ட விண்ணப்பங்களை exceed expectations எனக் குறிப்பிட்டு 20 புள்ளிகள் வழங்கப்படுகிறது. வேலைக்கு விண்ணப்பித்து இருக்கும் கம்பெனியின் தகுதிக்கும் ஏற்ப இருக்கும் விண்ணங்கள் meet expectations எனக் குறிப்பிடப்பட்டு 10 புள்ளிகள் வழங்கப்படுகிறது. சரியாக இல்லாத கம்பெனிக்கான விண்ணப்பங்களுக்கு எந்த மதிப்பெண்ணும் இல்லை. நீங்கள் விண்ணப்பிக்கும் கம்பெனிக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.
மேலும், குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறை நிலவும். அந்த மாதிரியான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். சர்வதேசமயமாக்கல் நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கும் நிறுவனங்களிடம் 10 போனஸ் புள்ளிகளைப் பெற முடியும்.
இதுமட்டுமல்ல ஒரு categoryல் உங்களின் மதிப்பெண் குறைந்தால் அடுத்த categoryல் அதிகம் கிடைக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அப்படி 40 மதிப்பெண் பெறும் ஊழியர்களுக்கு தான் SPass அப்ரூவ் ஆகும் எனக் கூறப்படுகிறது.