வேலைவாய்ப்பு சட்டம் மற்றும் CPF சட்டத்தின்படி முறையே ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி புரிந்துகொள்ள பணி உரிமை முயற்சி செய்து வருகின்றது. மனிதவள அமைச்சகம் மற்றும் CPF வாரியத்தால் 2012ல் தொடங்கப்பட்டது தான் Workright என்று அழைக்கப்படும் பணி உரிமை. வேலைவாய்ப்பு சட்டம் மற்றும் சிபிஎஃப் சட்டத்துடன் விழிப்புணர்வையும் தேசிய இணக்கத்தையும் உயர்த்துவதற்கு Work Right முயல்கிறது.
ஒரு தொழிலாளியாக வேலை நேரம் மற்றும் கூடுதல் வேலை நேரம், ஆண்டு விடுப்பு, நோய்வாய் விடுப்பு,
பொது விடுமுறை உரிமைகள் மற்றும் சிபிஎஃப் பங்களிப்புகள் ஆகியவற்றை பற்றி தொழிலாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு சட்டம் விதி மீறலைப் பற்றி புகாரளிக்க தொழிலாளர்களுக்கு என்று பிரத்தியேகமாக சில தொலைபேசி எண்களும் அளிக்கப்பட்டுள்ளது. 1800 221 9922 என்ற இந்த எண்ணுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போன் செய்து புகார் அளிக்கலாம். அதே போல சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த எண்ணுக்கு அழைக்கலாம்.
ஞாயிறு மாற்று பொதுவிடுமுறை நாட்களில் இந்த சேவை மையம் திறக்கப்படமாட்டாது.
மேலும் Work Right குறித்த பல தகவல்களை நீங்கள் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் இந்த https://www.mom.gov.sg/employment-practices/employment-act/workright?utm_source=link&utm_campaign=workrightfy21 இணையத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.