TamilSaaga

பணியிட பாகுபாடிற்கு எதிரான சட்டங்கள் – நாடாளுமன்றத்தில் அமைச்சர் டான் சீ லெங் விளக்கம்

சிங்கப்பூரில் பணியிட பாகுபாட்டைக் கையாள்வதற்கான சட்டம் குறித்து ஆராய மனிதவள அமைச்சகம் முத்தரப்பு குழுவை அமைக்கும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று திங்களன்று (ஜூலை 26) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொழிலாளர் தொகுப்பில் சிங்கப்பூரை வலுப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே-வின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் டாக்டர் டான் இந்த கருத்தை கூறினார்.

பல ஆண்டுகளாக சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு மனிதவளக் கொள்கைகளில் பல மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ள நிலையில், பல சிங்கப்பூர் PME-க்கள் (தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்) கொள்கை மாற்றங்கள் போதுமானதாக இல்லை என்று கருதுகிறார்கள் என்று திரு டே கூறினார்.

நியாயமான கருத்தாய்வு கட்டமைப்பின் கீழ் முதலாளிகள், ஒரு வெளிநாட்டினரைக் வேளைக்கு அமர்த்த கருத்தில் கொள்வதற்கு முன்பு உள்ளூர்வாசிகளுக்கு வேலை காலியிடங்களை பற்றி விளம்பரப்படுத்த வேண்டும்.

ஆனால் நிறுவனங்கள் ஏற்கனவே சில வெளிநாட்டு தொழிலாளர்களை மனதில் வைத்துக்கொண்டு தான் தங்களுடைய வேலைக்கான விளம்பரங்களை அளிப்பதாக திரு டே கூறினார். ஆனால் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் தெரிவித்தார்.

Related posts