TamilSaaga

திருடிய பணத்தில் விலையுயர்ந்த போன் மற்றும் உள்ளாடை.. பணத்தாசையால் நேர்ந்த பரிதாபம் – 28 வயது “வெளிநாட்டு பணிப்பெண்” சிங்கப்பூர் சிறையில்

சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டு பணிப்பெண் ஒரு வயதான பெண்மணியிடம் வேலை செய்து வந்த நிலையில் அவருடைய கிரெடிட் கார்டை திருடி சுமார் 13,700 வெள்ளி அளவுக்கு தனக்கான பொருட்கள் வாங்கவும், Top Up செய்யவும் பயன்படுத்தியுள்ளார்.

ரிரின் ரியா புஸ்விதா சாரி என்ற அந்த இந்தோனேஷியா பணிப்பெண், பிராட்டெல் சாலையில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையத்திலும், ஷாப்பி சிங்கப்பூர் என்ற இ-காமர்ஸ் தளத்திலும் அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தியுள்ளார்.

நேற்று வெள்ளியன்று (மே 6), 28 வயதான அந்த இந்தோனேசியப் பணிப்பெண் தன் மீது சுமத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது விதிக்கப்பட்டார். தண்டனையின் போது நான்கு திருட்டு குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டன.

தனது தனிப்பட்ட ஆதாயத்துக்காக ரிரின் இந்தக் குற்றத்தைச் செய்ததாக அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் பெஞ்சமின் சாமிநாதன் கூறினார்: “பாதிக்கப்பட்ட பெண்ணின் பணத்தை தனக்குத்தானே விலையுயர்ந்த மொபைல் போன்கள், உடைகள் மற்றும் உள்ளாடைகளை வாங்க அவர் பயன்படுத்தியுள்ளார் என்றார் அவர்.

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டினருக்கு ஒரு “Good News”.. இனி தானியங்கி குடியேற்ற அனுமதியை பெற வாய்ப்பு – ICA வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

குற்றம் சாட்டப்பட்டவர் தான் வேலை செய்யும் வீட்டிற்கும் தனக்கும் இடையேயான நம்பிக்கையை பயன்படுத்தி அந்த குடும்பத்தாரை ஏமாற்றியதாகவும் சாமிநாதன் கூறினார். 85 வயதான பெண் மற்றும் அவரது குடும்பத்திற்காக ப்ரடெல் சாலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் ரிரின் வேலை செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்கர நாற்காலியில் முடங்கிய சிங்கப்பூர் பெண்.. கேவலமான காரணம் சொல்லி அவர் “பிறப்புறுப்பில் கத்தியால் குத்திய மாஜி கணவன்” – படாதபாடுபட்ட பெண்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாதிக்கப்பட்டவரின் ஓசிபிசி வங்கியின் கிரெடிட் கார்டை வீட்டில் உள்ள ஒரு டேபிளில் பார்த்த அவர் அதை எடுத்துச் சென்றதாக நீதிமன்றம் கூறியது. பின்னர் ரிரின் தனது சொந்த கைப்பேசி எண்ணின் கீழ் இரண்டு ஷோபி கணக்குகளையும் பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமான மற்றொரு கணக்கையும் உருவாக்கியுள்ளார்.

அதன் மூலம் 13,000 வெள்ளிக்கும் அதிகமான பொருட்களை வாங்கிய நிலையில் அந்த மூதாட்டியின் பேத்தி ஒருவர் மூலம் இந்த சதி அம்பலமானது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts