மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சிங்கப்பூரர் ஒருவரிடம் மலேசியப் போலீசார் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று இன்று ஏப்ரல் 14ம் தேதி பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளதுவெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் அந்த நபரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது வாகனத்தின் பின்பக்கக் கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு போலீஸ் கார் இருப்பதைக் காணமுடிகிறது. அதன் பானெட்டில் “போலிஸ்” என்று எழுதப்பட்டிருந்தது மற்றும் காரின் மேல் பகுதியில் போலீஸ் வாகனத்தில் எறிவதுபோன்ற நீல ஒளிரும் விளக்குகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய போலீசார் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் காணொளி
இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது, சம்பவத்தின்போது சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட தனது காரில் தான் கோலாலம்பூருக்குச் சென்றதாக அந்த சிங்கப்பூரார் கூறினார். சாலையில் தான் சென்றுகொண்டிருக்கும்போது உள்ளூர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பின்னர் மலேசிய போலீசார் அந்த நபரிடம் பல விதிகளை அவர் மீறியதாக கூறியதாகவும், ஆனால் நான் செய்யவில்லை என்று அந்த நபர் கூறியதாகும் கூறப்படுகிறது. மலேசிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்பட பல தவறுகளை ஆவர் செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் அந்த நபர் எதிர்திசையில் வாகனம் ஓட்டுவதைக் கண்டதாகவும் மலேசியப் போலீசாரால் கூறப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக கைது செய்யப்படுவதையும், அபராதம் விதிக்கப்படுவதையும் தவிர்ப்பதற்காக அந்த நபருக்கு மலேசியா காவல்துறைக்கு “லஞ்சம்” வழங்குமாறு கூறியதாகவும் அந்த பதிவில் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் நபரிடம் பணத்தைத் தங்கள் காரில் வீசுமாறும், யாரும் பார்க்காத நேரத்தில் அதைச் செய்யும்படியும் மலேசிய காவல்துறை கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் யார் மீது குற்றம் உள்ளது என்பது தற்போதுவரை நிரூபிக்கப்படவில்லை.
உண்மையில் மலேசிய போலீசார் லஞ்சம் கேட்டார்களா அல்லது இல்லையா என்பது தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்த பலர், அந்த போலீஸ் வாகனத்தின் Number Plate தெளிவாக தெரிவதால் அதை வைத்து அவர் ஏன் புகார் அளிக்கவில்லை என்று கேள்விகேட்டுள்ளனர்.
சிலர், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மலேசிய போலீசார் மீண்டும் அந்த வேலையை செய்ய துவங்கியுள்ளனர் என்று கூறியுள்ளனர். இந்த வீடியோ குறித்து வழக்கு விசாரணை விரைவில் நடக்கும் என்று தெரிகிறது.