TamilSaaga

10 வருடங்களுக்கு முன் வேலையை விட்டு நீக்கம்.. இன்று உலக புகழ்பெற்ற Marvelன் Super Hero.. “வேலையைவிட்டு தூக்கியதற்கு நன்றி” – மாஸ் Tweet போட்ட Simu Liu

வேலையில் இருந்து நீக்கப்படுவது என்பது நமது வாழ்க்கையின் மிகவும் சோகமான தருணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் Marvels திரைப்படமான Changi-Shi படத்தின் நட்சத்திரமான Simu Liuவைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது Accountant வேலையை அவர் இழந்த பிறகு தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 12 அன்று, 32 வயதான அவர் தனது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை நினைவுகூரும் வகையில் ஒரு நீண்ட பேஸ்புக் பதிவினை வெளியிட்டார். சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு Deloitte Torontoவில் இருந்து தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அவர்.

கனடா நாட்டை சேர்ந்த அந்த நடிகர் தனக்கு நடந்த விரும்பத்தகாத அனுபவம் பற்றிய கூடுதல் விவரங்களை அதில் கூறியுள்ளார். “ஒரு நாள் Deloitteல் உள்ள எனது அலுவலகத்திற்கு நான் தீடீர் என்று அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கு அவர்கள் எனது வேலையில் இருந்து நான் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கூறினார்கள்.

சிங்கப்பூரில் இந்திய பெண்ணை திருமணம் செய்த “Darius Cheung” – வீடு கொடுக்க மறுத்த சிங்கப்பூரர்கள் – 25.7% வெளிநாட்டு மக்களுக்காக வெப்சைட் தொடங்கி வெற்றி கண்ட “ராக் ஸ்டார்”

“HR துறையை சேர்ந்த ஒரு பெண்மணி மற்றும் ஒரு பாதுகாப்புக் காவலர் என்னை அலுவலகத்தின் முன் வாசல் வரை அழைத்து வந்தனர், கண்ணீர் ததும்பி நின்றேன். எனது பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பி பார்க்கலாம் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்” என்றார் அவர்.

அத்தோடு தனது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அவர் கருதினார், எனது குடும்பம் எனக்காக செலவிட்ட பணம், நேரம் எல்லாமே வீணானதாக அவர் உணர்ந்துள்ளார். அதன் பிறகு 10 ஆண்டுகள் என்ன செய்வது என்று தெரியாமல் கிடைத்த வேலைகளை செய்தேன். கிரெடிட் கார்டு கடன் ஒரு பக்கம், சரியான வேலை இல்லாதது ஒருபுறம் என்று வாழக்கை நகர்ந்தது.

அந்த காலகட்டத்தில் அவர் பார்த்த பல வேலைகளில் ஒன்று தன stock image மாடல் வேலை, அப்போது தான் ஹாலிவுட் ஆசை அவரை பின்தொடர்ந்து. ஆனால் சாமானியன் ஒருவனுக்கு அது மீகப்பெரிய கடலில் நீந்துவது போல. ஆனால் அவரது முயற்சிகள் அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் பலனளிக்கத் தொடங்கின. அவரது வெற்றிகளில் அதிர்ஷ்டம் “கணிசமான பங்கு” வகித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூர் – மலேசியா நில எல்லை.. ஏப்ரல் 15 முதல் 17 வரை.. எந்தெந்த நேரத்தில் எல்லையை கடப்பதை தவிர்க்க வேண்டும்? ICA விளக்கம்

இறுதியில் 13 ஆண்டுகள் கழித்து உலகின் தலைசிறந்த ஹாலிவுட் பட நிறுவனமான Marvel நிறுவன படத்தில் ஹீரோவாக தோன்றினார் Simu. அதற்கு முன்னதாக Kim’s Convenience என்ற தொலைக்காட்சி தொடரிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை பல ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்மிஸ் செய்த நிறுவனத்திற்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “நான் வேறொருவருக்காக கட்டியெழுப்பிகொண்டிருந்த ஒரு வாழ்க்கையை நீங்கள் அழித்தீர்கள், அதனால்த் தான் நான் இறுதியாக எனக்காக ஒரு வாழ்க்கையை உருவாக்க முடிந்தது” என்று கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts