ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அதன் நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 50,000 அமெரிக்கா டாலர்கள் கொடுத்து உதவுவதாக அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் தீவிரமாக ஏற்பட்ட நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியது.
இதுவரை 2445 மக்கள் இடிபாடுகளில் சிக்கி இறந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி உள்ளதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடானது ஏற்கனவே மலைகள் நிறைந்த பகுதி என்பதால் மீட்பு பணியானது கடினமாக இருப்பதால் மற்ற நாடுகளில் உதவியை ஆப்கானிஸ்தான் நாடியுள்ளது. மேலும் மீட்பு பணிக்காக பொருள் உதவி தேவை எனவும் மற்ற நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதனை அடுத்து சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தான் நாட்டிற்கு உதவும் வகையில் 68000 சிங்கப்பூர் டாலர்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளது.