TamilSaaga

Exclusive: சிங்கப்பூர் செல்ல Skilled டெஸ்ட்… இன்றைய நிலை என்ன? இன்ஸ்டியூட் சொல்லும் தகவல்… ஒரு நல்ல செய்தி..! ஒரு கெட்ட செய்தி!

சிங்கப்பூர் செல்ல அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் துறை தான் skilled டெஸ்ட். இதில் வேலைக்கு செல்ல பயிற்சி எடுத்து பாஸ் செய்து விட்டாலே போதும் பல வருடங்களுக்கு பாதுகாப்பாக இருக்கலாம் என்ற நிலை தான் இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக கோட்டாக்கள் கட்டுப்படுத்தப்பட்டு பலரால் skill அடிக்க முடியாமல் இருந்து வந்தது. ஆனால் இந்த முறை ஒரு ஃப்ரெஷ்ஷான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை பிடிக்காமல் செய்யும் நபரா நீங்க… Resign செய்ய ஐடியாவில் இருக்கீங்களா? இதை follow பண்ணுங்க ஒரு பிரச்னையும் இல்லாமல் சட்டுனு வெளியேறலாம்

ஸ்கில் டெஸ்ட் முடித்தவர்கள் ரிசல்ட்டுக்கு கூட 100 நாட்கள் வரை வெயிட் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. கடந்த வாரங்களில் தான் ஜனவரி வரை ரிசல்ட்டே வந்து இருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டியூட்டில் இருக்கும் பயிற்சி பெறும் ஊழியர்களின் நிலை என்னவென்றே தெரியாத நிலை தான் முதலில் இருந்தது. கடந்த சில வாரங்களிலேயே அட்மிஷன் போட்டால் மெயின் டெஸ்ட் ஏறவே பல மாதங்கள் எடுக்கும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்ஸ்ட்டியூட்டிடம் இதுகுறித்து தமிழ்சாகா தரப்பில் இருந்து விசாரித்தோம். அப்போது சென்னையை சேர்ந்த முக்கிய இன்ஸ்டியூட்டின் தலைமை அதிகாரி கூறுகையில், தற்போதைய சூழலில் Skilled டெஸ்ட் அட்மிஷன் போடும் நபருக்கு முதல் பணமாக 10 ஆயிரம் கேட்கப்படுகிறது. ஆனால் அட்மிஷன் போட்டு 4 மாதங்கள் கண்டிப்பாக காத்திருக்க வேண்டும். இந்த நாட்களில் அதிகரிப்பு இருக்கும்.

இதையும் படிங்க: இந்த குற்றங்களுக்கு மரண தண்டனை தான்… பிடிவாதம் பிடிக்கும் சிங்கப்பூர்… மறுக்கும் உலக நாடுகள்… சிங்கை இதில் strictஆ இருப்பதற்கு காரணம் என்ன?

ஆனால் நாட்கள் குறையாது எனக் கூறப்படுகிறது. அப்படி காத்திருந்து இன்ஸ்டியூட் கூப்பிடும் நேரத்தில் வரும் நபருக்கு 15 நாட்களில் பயிற்சி முதல் டெஸ்ட் வரை எல்லா வேலைகளும் முடிந்து விடுகிறதாம். இந்த தகவலை அறிந்து கொண்ட பிறகே இன்ஸ்டியூட்டில் அட்மிஷன் போடுங்கள் என்றார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts