TamilSaaga

சிங்கப்பூரில Class 4 license எடுக்க போறீங்களா? வெயிட்… எவ்வளவு கட்டணம்? யாருக்கெல்லாம் எடுக்கவே முடியாது… இதை தெரிஞ்சிக்கிட்டு கிளம்புங்க..!

கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு Class 4 driving license தான் எடுக்க வேண்டும். இதை எப்படி எடுக்கலாம். யாருக்கெல்லாம் எடுக்க முடியாது என தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படியுங்கள்.

S-pass, E-pass, Work permit என எந்தவிதமான விசாவில் இருப்பவர்களும் Class 4 லைசன்ஸ் எடுக்கலாம். ஆனால் உங்களில் தொழில் குறித்த தகவலில் டிரைவர் என மட்டுமே இருக்க வேண்டும். அதில் Driver-cum-Worker என இருந்தால் எந்தவித பாஸ் வைத்திருப்பவர்களாலும் எடுக்கவே முடியாது.

Class 3 driving license இருந்தால் மட்டுமே Class 4 driving license எடுக்க முடியும். உங்க கம்பெனியில் Class 4 வண்டி இருக்க வேண்டும். Class 4 லைசன்ஸ் வுட்லாண்ட்டில் மட்டுமே எடுக்க முடியும். அதற்கு தனியாக அப்பாயின்மெண்ட் எதுவும் வாங்க தேவையில்லை. நேரடியாகவே செல்லலாம்.

இதற்கு கம்பெனியில் இருந்து லெட்டர் வாங்கி கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட தகவலுடன் டிரைவர் என்பதை மறக்காமல் அந்த லெட்டரில் குறிக்கப்பட வேண்டும். உங்க டிரைவிங் லைசன்ஸ், ஒரிஜினல் வொர்க் பெர்மிட், Mywork SG Passல் உங்க வொர்க் பெர்மிட் ஸ்கேன் செய்தால் தனிப்பட்ட தகவல்கள் வரும் அதையும் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.

இதை எடுத்துக்கொண்டு லெவல் 1க்கு போக வேண்டும். உங்க டாக்குமெண்ட் சரிபார்த்து உங்களுக்கு Class 4 லைசன்ஸ் எடுக்கலாம் என்றால் லெவல் 3க்கு உங்களை அனுப்புவார்கள். அங்கு உங்களுக்கு டோக்கன் போடப்பட்டு கட்டணத்தை செலுத்த சொல்வார்கள். $879.22 சிங்கப்பூர் டாலர் கட்டணமாக பெறப்படும்.

4 பிராக்டிக்கல் வகுப்பு மற்றும் ஒரு தியரி வகுப்பு இருக்கும். அடுத்த நாள் PDL(Provisional Driving Licence) வாங்க இதே டாக்குமெண்ட்களை எடுத்துக்கொண்டு வர சொல்லுவார்கள். இதற்கு $28 கட்டணமாக வாங்கப்படும். மூன்றாவது நாள் பிராக்டிக்கல் தேர்வுக்கு நாள் கொடுப்பார்கள். அதற்கு கட்டணமாக $236.30 வாங்கப்படும். மொத்தமாக $1141.52 கட்ட நேரிடும்.

3 நாளில் இந்த வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு வகுப்புகள் நடக்கும். கண்டிப்பாக 8 வகுப்புக்கு செல்ல வேண்டும். இது தமிழ்நாட்டில் இருப்பதை போலவே தான் போக்குவரத்து குறித்த தகவல்களை சொல்லி கொடுப்பார்கள். இதை தொடர்ந்து தேர்வு முடித்தால் பாஸ் செய்தால் உங்களுக்கு class 4 லைசன்ஸ் கிடைத்து விடும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts