TamilSaaga

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு வழக்குகள்.. 4 மாதத்தில் 5500 பேர் பாதிப்பு – அமைச்சர் Grace Fu எச்சரிக்கை

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை 5,500 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த 2021ம் ஆண்டு மொத்தம் 5,258 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த ஏப்ரல் 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 746 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 வரையிலான வாரத்தில் 937 வழக்குகள் பதிவாகியதில் இருந்து இதுவே அதிகபட்ச ஏழு நாள் எண்ணிக்கையாகும்.

“மேலும் வரும் மாதங்களில் டெங்கு வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதிர்பார்க்கிறோம்” என்று திருமதி ஃபூ கூறினார். சிங்கப்பூர் தற்போது கடுமையான டெங்குச் சூழலை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த ஆண்டு ஒரு பெரிய வெடிப்பைக் காணலாம் என்றும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) எச்சரித்துள்ளது.

சிறையில் தட்சிணாமூர்த்தி கட்டையா, மேலும் ஒரு இந்திய வம்சாவளி மலேசியருக்கு சிங்கப்பூரில் தூக்கு? – மலேசிய ஊடகங்கள் சொல்வது என்ன?

இந்த ஆண்டு வழக்குகள் அதிகரித்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்று NEA தெரிவித்துள்ளது. முதலாவதாக, சமீபத்திய வெப்பமான, மழை மற்றும் ஈரப்பதமான வானிலை சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான Aedes aegypti கொசுக்கள் உருவாவதற்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இரண்டாவதாக சிங்கப்பூரில் முன்பு அவ்வப்போது தோன்றி வந்த serotype 3 டெங்கு வைரஸ் இப்பொது மீண்டும் தலைதூக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக அதிக அளவிலான மக்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அதிகமானோர் கொசுக்களால் கடிக்கப்படுவது இந்த வைரஸ் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டெங்கு வழக்குகள் மிகவும் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதாகவும், டெங்குவை எதிர்த்துப் போராட அனைவரும் உதவ வேண்டும் என்றும் திருமதி ஃபூ கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts